பக்கம் எண் :

இராயசூயச் சருக்கம் 9

பிந்துஸரஸ்: இது - கைலாசகிரியின் வடக்கில் மைநாகபர்வதத்தைச் சார்ந்த
இரணியசிருங்க மென்னுங் குன்றிலுள்ளது.  பொய்கை - மானிடராக்காத
நீர்நிலை.  தன் - சாரியை.                                 (4)

5. - மிகப் பல ஏவலாளர்கள்இரத்தினங்களை
எடுத்துக்கொண்டு வருதல்.

என்பதன்முன் முப்பதின்மே லிரட்டிகொணூறாயிரவ ரெடுத்த
                                             பாரம்,
வன்புடனே தரித்துவரை யசைந்தாலு மசையாதவயிரத்தோளா,
ரன்புமிகும் விழிக்கருணை யறன்புதல்வ னேவலினா
                                       லசுரத்தச்சன்,
றன்பணியீ தெனப்பணிப்ப வொருநொடியிற்கொடுவந்தார்
                                       தளர்விலாதார்.

     (இ -ள்.) என்பதன்முன் - என்று (மயன்) சொன்னதற்கு முன்னே
[சொன்னவுடனே யென்றபடி],- அன்பு மிகும் விழிகருணை அறன் புதல்வன்
ஏவலினால் - அன்புநிறைந்த கண்ணருளையுடைய தருமபுத்திரனது
ஆஜ்ஞையைக்கொண்டு, - அசுரத்தச்சன்தன் பணி ஈது என பணிப்ப - அசுர
சிற்பியான மயன் தனது காரியம் இதுவென்று கட்டளையிட, வரை
அசைந்தாலும் அசையாத வயிரம் தோளார்-மலைநெகிழ்ந்தாலும் நெகிழாத
மிக்க உறுதியுள்ள தோள்களை யுடையவர்களும், தளர்வு இலாதார் - (தொழில்
செய்தலில்) தளர்ச்சியில்லாதவர்களுமான, முப்பதின் மேல் இரட்டிகொள் நூறு
ஆயிரவர் - அறுபதுலக்ஷம்பேர், எடுத்த பாரம் வன்புடனே தரித்து - (தாம்
தாம்) எடுத்த (நவரத்தினங்களாகிய) பெரும்பாரச் சுமைகளை வலிமையோடு
தாங்கி, ஒரு நொடியில் கொடு வந்தார் - ஒருமாத்திரைப் பொழுதிலே கொண்டு
வந்து சேர்ந்தார்கள்;  (எ - று.)

     'என்பதன்முன் அறன்புதல்வ னேவலினால்' என்று காரியத்தை முன்னும்
காரணத்தைப் பின்னும் நிகழ்ந்தனவாகக் கூறியது, மிகையுயர்வுநவிற்சியணி;
இது, காரியவிரைவைச் சொல்வது.  முப்பதின்மேலிரட்டி - முப்பதை
இரண்டினாற் பெருக்கியதொகை;  எனவே, அறுபதாயிற்று.  முப்பதுக்குமேல்
இரண்டு கூடியதென்று கொண்டால், முப்பத்திரண்டு என்றாகும்.  பிறர்மேற்
கண்சென்றவிடத்து அருள்நிகழ்வதனாலும், மனத்து நிகழுங் கருணையின்
குறிப்புக் கண்ணின் உவந்தநோக்கத்திற் புலனாதலாலும், 'விழிக்கருணை'
எனப்பட்டது.  நொடி - இயல்பில் ஒருமுறை கைந்நொடித்தற்கு
வேண்டும்பொழுது.  கொடு-கொண்டு என்பதன் விகாரம்.  ஈது-இது என்பதன்
சுட்டு நீண்டது.  'எடுத்த பாரம் வன்புடனே தரித்து' என்றது, அவர்களெடுத்த
இரத்தின பாரத்தின் மிகுதியை யுணர்த்தும்.                      (5)

6. - மயன் மண்டபங் கட்டத் தொடங்குதல்.

மீதடுக்கிப் பசும்பொன்னாற்சுவர்செய்து மரகதத்தூண்
                                        வீதிபோக்கி,
யோதிடத்திற் சுருங்காமற் செழுந்துகிருத் திரம்பரப்பி
                                       யுலகோரேழு,
மாதிடத்தான்வைகுதற்குவாய்க்குமதோ விதுவென்ன