(இ - ள்.)உன்ன அரு தவம் பயன் உற்ற மைந்தன்உம்- எண்ணுதற்கும் அருமையான தவத்தினது பலனைஅடைந்த குமாரனான அருச்சுனனும்,-அன்னையை-(தனக்குத்)தாயும், மின் இடை அரிய பாவையை-மின்னல்போல நுண்ணியதாய்விளங்குகிற இடையையுடைய அருமையான பாவைபோன்றவளும், கன்னலைஅமுதொடு கலந்த சொல்லியை-கரும்புரசத்தைத் தேவாமிருதத்தோடு கலந்ததுபோல மிக இனிய சொற்களையுடையவளும்ஆகிய இந்திராணியை. (கண்டு), சென்னியை அவள் பதம் சேர்த்து - (தனது) முடியை அவளது அடிகளிற் சேரவைத்து [சாஷ்டாங்கமாகநமஸ்கரித்து], நின்றனன்-எழுந்து நின்றான்;(எ - று.) பாவை -சித்திரப்பதுமையும் கண்மணிப்பாவையுமாம். கன்னல் - சாற்றுக்கு முதலாகுபெயர். கண்டு என்று ஒரு சொல் வருவிக்க. (141) 142.-இந்திராணிஅருச்சுனனைவாழ்த்துதல். நின்றவக்குமரனைத்தழுவிநேயமோடு ஒன்றியவுவகைய ளுரைவழுத்தினாள் வென்றிகொளையநீவிபுதர்தம்பிரான் தன்றிருச்செல்வமுந் தாங்குவாயெனா. |
(இ - ள்.)(இந்திராணி),-நின்ற அ குமரனை- நமஸ்கரித்து நின்ற குமாரனானஅவ்வருச்சுனனை,நேயமோடு - அன்புடனே, தழுவி - அணைத்துக்கொண்டு,ஒன்றிய உவகையள் - பொருந்திய களிப்புடையவளாய், (அவனைநோக்கி), 'வென்றிகொள் ஐய - ஜயத்தைக்கொண்ட ஐயனே! நீ-, விபுதர்தம் பிரான் தன் திரு செல்வம்உம் - தேவராஜனானஇந்திரனது மேலான ஐசுவரியத்தையும், தாங்குவாய்- பரிப்பாயாக',எனா- என்று, உரை வழுத்தினாள்- வார்த்தை சொன்னாள்; (எ - று.) வணங்கினவனைநோக்கித்தேவேந்திரனது ஐசுவரியத்தையும் பெறுவா யென்றது வாழ்த்துஆதல் காண்க. (142) 143.-இந்திராணிவாழ்த்திவிட்டுத் தன்னிருப்பிடம் சேர்தல். ஆயிரம்பதின்மடங் காகவன்னையும் மாயிரும்புதல்வனைவாழ்த்திவாழ்த்தியே தூயசெம்பருமணி சுடருமாளிகை ஏயினளிந்திர னிதயம்போன்றுளாள். |
(இ - ள்.)இந்திரன் இதயம் போன்று உளாள் - இந்திரனது மனத்தை யொத்து உள்ளவளாகிய, அன்னைஉம்- அருச்சுனன் தாயாகிய இந்திராணியும்,-மா இரு புதல்வனை- மிக்க பெருமையுடைய (தன்) மகனானஅருச்சுனனை,ஆயிரம் பதின்மடங்கு ஆக-(தாய் மகனை வாழ்த்து மளவினும்) பதினாயிரம்பங்குஅதிகமாக, |