வகை பெறுவசிட்டன்-(தத்துவஞான) வகையைப்பெற்ற வசிஷ்டரும், (ஆதியர்)-முதலானவர்களாகிய, அரு மறை முனிவர்-அருமையான வேதங்களில் வல்ல முனிவர்களும், ஏழ் வசுக்கள் ஆதியர்- ஏழுவசுக்கள்முதலான தேவர்களும், அகம் மகிழ்ந்து - மனங்களித்து, உவகை கொள் அன்பினால்-அம்மகிழ்ச்சியைக்(காரியமாகக்) கொண்ட அன்பினால்,திரு முகம் மலர்ந்து (தமது) அழகிய முகம்மலர்ச்சியுறப்பெற்று, வாழ்த்த-வாழ்த்தவும்,-(எ - று.) தவமிகுதியாலாகிய பிரமதேஜசினாலும்,தம்மை யடுத்தவரையும் பரிசுத்தராக்கவல்ல தூய்மையாலும், சிகையனல், அகத்தியனுக்கு உவமையாம்:இந்த அடைமொழியைப் புலத்திய வசிட்டருக்குஞ் சேர்க்க. வஸு ஷ்டன்-ஐம்பொறிகளைவசப்படுத்தினவன்;ஜிதேந்திரியன். அகத்தினழகு முகத்தில் தெரியுமாதலால், 'அகமகிழ்ந்துவகைகொளன்பினாற் றிருமுகமலர்ந்து'எனப்பட்டது. அஷ்டவசுக்களுள் பிரபாசனென்னும்வசு தன்மனைவியின்சொல்லைக்கேட்டுவசிட்டரிடமுள்ள காமதேனுவைக் கொள்ளைகொள்ளமுயன்று அதனையுணர்ந்தஅம்முனிவரது சாபத்தால் மானுட ஜந்மமெடுத்துப் பீஷ்மவடிவமாய்ப் பூமியி லிருத்தலால், 'ஏழ்வசுக்கள்'என்றார். வசுக்கள் எண்மராவார்-அநலன், அநிலன், ஆபன், சோமன், அத்வரன், துருவன், பிரத்தியூஷன், பிரபாசன் என இவர். ஆதியர் என்றது-ஆதித்தர் பன்னிருவரும், உருத்திரர் பதினொருவரும், மருத்துவ ரிருவரும் முதலியோரை. அகஸ்த்ய னென்னுஞ் சொல்லுக்கு- (விந்திய) பருவதத்தை வளரவொண்ணாதுதடுத்துஅடக்கியவனென்று பொருள்:அகம்-மலை: ஸ்த்யன்-அடக்கியவன். தகையுள வகத்தியன் புலத்தியன்றவ என்றும் பாடம். (147) 148. | செம்மணிவெயில்விரி சிலம்புகொஞ்சவே கைம்மணிவரிவளைகலந்துபொங்கவே பெய்ம்மணிமேகலைபிறங்கியார்க்கவே துய்ம்மணியொளியரமாதர்சூழவே. |
(இ-ள்.) செம்-சிவந்த, மணி - இரத்தினங்களின், வெயில்- (சூரியகாந்திபோன்ற)ஒளி, விரி - பரவுகின்ற, சிலம்பு-காற்சிலம்புகள், கொஞ்ச-இனிமையா யொலிக்கவும்,-கை-கைகளிலணிந்த மணி- இரத்தினங்களைப்பதித்த,வரி-கோடுகளமைந்த, வளை-வளையல்கள், கலந்து-(ஒன்றோடொன்று)நெருங்கி, பொங்க-ஆரவாரிக்கவும்-பெய்- (இடையில்)அணிந்த, மணி மேகலை-இரத்தினங்களைப்பதித்த மேகலாபரணங்கள், பிறங்கி-பிரகாசித்து, ஆர்க்க-ஒலிக்கவும்,-துய்மணி ஒளி-சுத்தமான இரத்தினங்களின் ஒளி (போன்றதேககாந்தி)யையுடைய, அரமாதர்-தெய்வப்பெண்கள் சூழ-(தம்மைச்)சூழ்ந்து நிற்கவும்,-(எ-று.) மணி என்பதற்கு- முதலடியில் இரத்தினமென்றும், இரண்டாமடியில் அழகு என்றும், மூன்றாமடியில்முத்து என்றும், நான்காமடியில் மாணிக்கமென்றுங் கொள்ளலாம். மேகலை-மாதரியையணியுள் எண்கோவையணி: "எண்கோவைமேகலை"என்றது |