காண்க. கொஞ்ச,பொங்க, ஆர்க்க என்னுஞ் செயவெனெச்சங்கள்,'சூழ' என்பதனைக்கொண்டன. வெயில்வருஎன்று பிரதிபேதம். (148) வேறு. 149. | இவ்வாறிவ ரிருவோர்களு மிணைமாமுகிலெனவே செவ்வாளரிகிளர்கின்றதொர் செம்பொற்றவி சிடையே மைவ்வானக முழுதுஞ்செழுமறையோசைவி ளைக்கும் அவ்வானவர்புடைசூழ்தர வழகெய்தியி ருந்தார். |
(இ-ள்.)இ ஆறு - இந்தவிதமாக, இவர் இருவோர்கள்உம்-(இந்திரனும் அருச்சுனனும் என்னும்)இந்த இருவரும், செம் வாள் அரி கிளர்கின்றது ஒர் செம் பொன் தவிசு இடைஏ - சிவந்த ஒளியையுடைய சிங்கத்தினுருவம் (தன்னில்விளங்கும்படி)சித்திரித்துச் செய்யப்பட்டதொரு செம்பொன்னினாலாகியசிங்காசனத்திலே, மை வாகனம் முழுதும் செழுமறை ஓசை விளைக்கும்அவானவர் புடை சூழ் தர-மேகங்களையுடைய ஆகாயத்தினிடை முழுவதிலுஞ் சிறந்த வேதங்களின்கோஷத்தை யுண்டாக்குகிற அத்தேவர்கள் பக்கங்களிற் சூழ்ந்துநிற்க, இணைமா முகில் என-பெரிய இரண்டு மேகங்கள்போல, அழகு எய்தி இருந்தார் - அழகு பொருந்தியிருந்தார்;(எ-று.) மைவ்வானகம் -எதுகை நோக்கிய விரித்தல். மை வானகம் என்பதற்கு - நீலநிறமாகத்தோன்றும் ஆகாயம்எனவும் உரைக்கலாம். இதுமுதற்பதினெட்டுக்கவிகள் - ஈற்றுச்சீரொன்று மாச்சீரும், மற்றை மூன்றும் மாங்கனிச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள். 150.-இருகவிகள்-ஒருதொடர்:அங்கு வந்து ஊர்வசி நாட்டியமாடஅருச்சுனன் கண்டுகளித்தலைக்கூறும். இருந்தாரிவர்குளிர்சாமரை யிருபாலுமிரட்டப் பெருந்தாரகைமதியொத்தொளி பெறுகின்றகுடைக்கீழ் முருந்தார்நகையரமாதரின் முதன்மைப்பெயர்புனையும் செருந்தார்குழலுடையாளரி திருவூருவின்வந்தாள். |
(இ - ள்.)இவர் - இவ்விருவரும், இருபால்உம் குளிர் சாமரை இரட்ட - (தமது) இரண்டுபக்கங்களிலும் குளிர்ந்த சாமரங்கள் வீசாநிற்க,-பெரு தாரகை மதி ஒத்து ஒளி பெறுகின்ற குடைக் கீழ் - பெரிய நக்ஷத்திரங்களாற் சூழப்பட்ட பூர்ணசந்திரனையொத்துப் பிரகாசத்தைப் பெறுகின்றதொரு வெண்கொற்றக்குடையின் கீழ், இருந்தார் - இருந்தார்கள்;(அப்பொழுது), முருந்து ஆர் நகை - மயிலிறகினடியையொத்த பற்களையுடைய, அரமாதரின் - தேவமகளிர்களுள், முதன்மை பெயர் புனையும்- தலைமையானபிரசித்தியைப்பெற்ற, செருந்து ஆர் குழல் உடையாள் - செருந்தி மரத்தின் மலர்நிறைந்த கூந்தலையுடையவளும்,அரி திரு ஊருவின் வந்தாள் - திருமாலினது திருத்தொடையிற் பிறந்தவளும்,-(எ-று.) |