பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்11

15.இயைந்துரைத்த வியைபின்படியினி
வியந்திருக்கும் விபினந்தொறுமிருந்து
உயர்ந்தபின்செய் வினையையின்றுன்னுதல்
அயர்ந்துரைத்த லலாதிலையாவதே.

     (இ-ள்.) இயைந்து உரைத்த இயைபின்படி- (துரியோதனாதியரது
சபையில்) சம்மதித்துச் சொன்ன உடன்பாட்டின்படி, இனி-இனிமேல், வியந்து
- (கண்டவர்) அதிசயப்படும்படி, (இப்பாண்டவர்), இருக்கும் -
செழித்திருக்கின்ற, விபினம்தொறும் - பலகாடுகளில், இருந்து -
வாசஞ்செய்திருந்து, உயர்ந்த பின்-(அஜ்ஞாதவாசங்கழிந்து) ஈடேறினபின்பு,
செய் - செய்வதற்குஉரிய, வினையை - போர்த்தொழிலை, இன்று -
இன்றைக்கே, உன்னுதல்-செய்யநினைத்துப் பேசுதல், அயர்ந்து உரைத்தல்
அலாது - மறந்து தப்பிப்பேசுவதேயல்லால், ஆவது-(அதனால்) உண்டாகும்
பயன், இலை-இல்லை; (எ-று.)

     உடன்படிக்கைக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டுவது யாவர்க்கும்
ஒத்ததே யாதலால், அதை மீறுவதாகப் பேசுவது தகுதியன்று எனச்
சொல்லிச் சினந்த அரசரைக் கண்டித்தவாறு.  இருந்தபின் என்று அமையாது
'இருந்துஉயர்ந்தபின்'என்றது-அஜ்ஞாதவாசத்தின் அருமையை
அறிவித்தற்கு.  காரியத்தைக் காரணமாக உபசரித்து, பேசுதலை, 'உன்னுதல்'
என்றார்; உன்னுதல்-நினைத்தல், வியந்து=வியக்க: எச்சத்திரிபு.        (15)

வேறு.

 16.-இதுவும்அடுத்த கவியும்-தருமபுத்திரனைநோக்கி
    ஸ்ரீ க்ருஷ்ணன் 'உமதுதாய்தனயர் முதலியோரை
உரிய இடங்களில் அனுப்பிவிட்டு நீர் தன்னந்தனியேவனத்து
உறைதல் நன்று'என்று கூறுவது தெரிக்கும்.

கேட்டிநீ முரச கேது கிளைஞர் தம் மிருக்கை தோறும்
ஈட்டிய புதல்வ ருள்ளோர் யாரையு மிருத்தல் செய்து
காட்டிடை நீரும் வைகிக் கடவநாள் கழித்து மீண்டு
நாட்டிடை வந்தாற் காண்டி நலனுளோர் நலன்க ளெல்லாம்.

     (இ-ள்.) (இவ்வாறு மகீபர்க்கு உரைத்திட்டுப் பிறகு தருமபுத்திரனை
நோக்கி),-முரசகேது - பேரிகையின் உருவத்தையெழுதிய கொடியையுடைய
யுதிட்டிரனே!நீ-,கேட்டி - (யான் சொல்வதைக்) கேட்பாயாக; கிளைஞர்தம்
இருக்கை தோறுஉம் - (உன்) பந்துக்களினுடைய இருப்பிடங்களில், ஈட்டிய
புதல்வர் உள்ளோர் யாரைஉம்-(நீங்கள்) பெற்ற புத்திரர்களையும்
மற்றுமுள்ள தாய்முதலிய எல்லோரையும், இருத்தல் செய்து-இருக்கும்படி
ஏற்பாடுசெய்து, காட்டிடை நீர்உம் வைகி-காட்டிலே நீங்களும் வசித்து, கடவ
நாள் கழித்து-கழிக்கக் கடவனவாகிய நாட்களைக் கழித்துவிட்டு, மீண்டு-
திரும்பி, நாட்டிடை வந்தால்-நாட்டினிடத்