குளிர் சாமரையென்றது - வீசுகின்ற காற்றின் குளிர்ச்சியையும் கண்ணுக்கு இனிமையையுங் கருதி. நக்ஷத்திரங்கள் - குடையின் சுற்றிலுந்தொங்கவிடப்பட்டுள்ள சரங்களுக்கும், மதி-குடைக்கும், வடிவமும் நிறமும் ஒளியும்பற்றிவந்த உவமை. இனி, மதியொத்து இருந்தார்என இயைத்து, நட்சத்திரங்கள் சூழ்ந்த பூர்ணசந்திரன்-தேவர்கள்சூழ்ந்த இந்திரார்ச்சுனர்க்கு உவமை யென்றலுமொன்று. செருந்து - பூவிதழ்என்றாருமுளர். செருந்தார்க்குழல் என்ற பாடத்துக்கு, செரும் - சூடியுள்ள, தார் - மாலையையுடைய,குழல் என்க: செரும்=செருகும், (அல்லது)சேரும். திரு - கண்டாரால் விரும்பப்படுந்தன்மை: என்றது, அழகை. (150) 151. | மானேதருவிழியாடிரு மாதேநிகரெழிலாள் தேனேதிகழ்மொழியாள்பொரு சிலையேதருநுதலாள் தானேதனைநிகர்வாள்பெயர்தருநாடகமெல்லாம் கானேசெறிதொடையானிரு கண்கண்டுகளித்தான். |
(இ-ள்.)மான்ஏ தரு விழியாள் - மான்விழியையேயொத்த கண்களையுடையவளும்,திரு மாதுஏ நிகர் எழிலாள் - இலக்குமியையே யொத்த அழகையுடையவளும், தேன்ஏ திகழ் மொழியாள்- தேனையேயொத்துவிளங்குகிற இன்சொல்லையுடையவளும்,பொருசிலைஏ தரு நுதலாள் - போர்செய்கின்ற வில்லையேயொத்த [வளைவான] புருவங்களையுடையவளும்,தான்ஏ தனைநிகர்வாள் - (வேறுஎவரும் தன்னையொப்பவரில்லாமையால்)தன்னைத்தானேஒப்பவளுமாகிய ஊர்வசி, பெயர்தரு - (அடிகளைப்)பெயர்த்து வைத்து ஆடுகின்ற, நாடகம் எல்லாம் - நர்த்தனம் முழுவதையும், கான்ஏ செறி தொடையான் - வாசனையேமிகுந்தகற்பகப்பூமாலையையுடையஅருச்சுனன், இரு கண் கண்டு - (தனது)இரண்டு கண்களாலும் பார்த்து, களித்தான் - மிக மகிழ்ந்தான்;(எ-று.) இந்திரன்நாடோறுங் கண்டுகளித்து வருவதனால்அதனைக்கூறாமல், அருச்சுனன் புதுமையாகக் கண்டுகளித்ததை இங்குக் கூறினார். தரு, நிகர் - உவமையுருபுகள். மானேர்தரு என்றும், சிலையேய்தரு,சிலையேபொரு என்றும்,தொடையாரிருகண்கண்டு களித்தார்என்றும் பாடம். (151) 152.-அருச்சுனன்ஊர்வசியின் நடனத்தை வியந்து புகழ்தல். இந்நாடகவிதம்யாவையும் யாரேதனிபுரிவார் மின்னாரிடைமின்னேரிழைமென்கொம்பையலாதார் என்னாவிழிகளியாமனமுருகாவிசையெழுதும் பொன்னாடுடையவன்மைந்தன்வியப்போடுபுகழ்ந்தான். |
(இ-ள்.) இசை எழுதும் - கீர்த்தியை (எவ்வுலகத்தும்)எழுதிவைத்த, பொன் நாடு உடையவன் மைந்தன் - பொன்னுலகமான சுவர்க்கலோகத்தையுடைய இந்திரனது குமாரனானஅருச்சுனன்,- விழிகளியா- (அந்நாடகத்தைக்)கண்களாற் (கண்டு) |