களித்து, மனம் உருகா- மனமுருகி, 'மின்ஆர் இடை - மின்னலையொத்த இடையையும், மின் நேர் இழை - மின்னலையொத்து விளங்குகின்ற ஆபரணங்களையுமுடைய,மெல் கொம்பை - மென்மையான பூங்கொம்பு போன்ற இவ்வூர்வசியை, அலாதார் - அல்லாதமகளிர்களுள், இ நாடகம் விதம் யாவைஉம் - இந்த நர்த்தனத்தின் வகைகளையெல்லாம்,யார்ஏ தனி புரிவார் - எவர்தாம் தனியே செய்யவல்லவர்? [எவருமிலர்]',என்னா- என்று, வியப்போடு புகழ்ந்தான் - ஆச்சரியத்தோடு சிறப்பித்துக் கூறினான்; 'தனிபுரிவார்'என்றதனால்,ஒவ்வொரு விதத்தை ஒவ்வொருவர் செய்தாலுஞ் செய்யக்கூடுமே யன்றி, இவ்விதங்களையெல்லாம்வேறே ஒருவராற் செய்யாமுடியாதென்றான். இழை - இரத்தினங்களிழைத்துச் செய்யப்படுவது. கொம்பு - உவமவாகுபெயர். இசையெழுதுதல் - கீர்த்தியை யாவருங்கொண்டாடும்படி பரவச் செய்தல். (152) 153.-இந்திரன்யாவர்க்கும் விடைகொடுத்து அனுப்புதல். திகழ்கின்றனவுரைதந்தை செவிப்போதுறுமுன்னே இகல்கொண்டுயர்தோளாய்புதி திந்நாடகமென்னா மகவான்பெருமிதவாழ்வுறை வானோர்முதல்யாரும் மிகுகுங்குமமுலையாருடன்விடைகொண்டிடவிட்டான். |
(இ-ள்.)திகழ்கின்றன உரை - (இங்ஙனம்)விளங்குவனவாகிய (அருச்சுனனது)சொற்கள், தந்தை செவி போதுறும் முன்ஏ - தந்தையாகிய இந்திரனது காதிற் செல்லும்முன்னே,-மகவான்- அவ்விந்திரன், 'இகல்கொண்டுஉயர் தோளாய் - வலிமையைக் கொண்டு உயர்ந்த தோள்களையுடையவனே! இ நாடகம்-இன்றைக்குச்செய்த நர்த்தனம், புதிது-நூதனமாயும் ஆச்சரியகரமாயு முள்ளது',என்னா- என்று சொல்லி, பெருமிதம் வாழ்வு உறை - பெருந்தன்மையையுடைய வாழ்வைக்கொண்டு வசிக்கின்ற, வானோர்முதல் யார்உம்-தேவர்கள் முதலிய எல்லாரும், மிகு குங்குமம் முலையாருடன்- மிகுந்த குங்குமக்குழம்பையணிந்த தனங்களையுடையதேவமாதர்களுடனே, விடை கொண்டிட - உத்தரவுபெற்றுக்கொண்டு செல்லும்படி, விட்டான் - (யாவரையும்) அனுப்பினான்;(எ-று.) இரட்டுறமொழிதலால், 'புதிது'என்பதற்கு இங்ஙனம் பொருள் உரைக்கப்பட்டது. மகவான் - நூறு அசுவமேதயாகங்களைச்செய்தவன். பெருமிதவாழ்வுரை என்ற பாடத்துக்கு - பெருந்தன்மையுடைய வாழ்த்துக்களைச்சொல்லுகின்ற என்று பொருளாம். செவிப்போதுற மகிழா என்றும் பாடம். (153) 154.-தேவேந்திரனும்அருச்சுனனும் அமுதுண்டவராய் இனிதிருத்தல். மகனும்புகழ்புனைதந்தையும்மந்தாகினியாடிச் சிகரம்பயில்வரைபோலுயர் திருமண்டபமிசையே |
|