பக்கம் எண் :

112பாரதம்ஆரணிய பருவம்

அகிறுன்றியகுழலார்பல ரரமாதரளிக்கும்
நிகரம்பயிலமுதுண்டவர் நிறைவெய்தியிருந்தார்.

     (இ-ள்.) மகன்உம் - மகனாகியஅருச்சுனனும், புகழ் புனை தந்தைஉம் -
புகழ்பூண்ட தந்தையான தேவேந்திரனும்,-மந்தாகினி ஆடி - ஆகாச
கங்காநதியிலே நீராடி, (பின்பு), சிகரம் பயில் வரைபோல் உயர் திரு
மண்டபம் மிசை-சிகரங்கள் பொருந்திய மலைபோலஉயர்ந்த அழகிய
ஒருமண்டபத்திலே, அகில் துன்றிய குழலார் புலர் அரமாதர் அளிக்கும்
நிகரம் பயில் அமுது உண்டவர்-அகிலின்புகை பொருந்திய
கூந்தலையுடையவர்களாகியபல தெய்வப்பெண்கள் கொடுத்த திரளாகவுள்ள
அமிருதம்போலினிய பலவகை யுணவைப் புசித்தவர்களாய், நிறைவு எய்தி-
திருப்தியையடைந்து, இருந்தார்-;(எ-று.)

    மேலுலகத்திலுள்ள கங்காநதி மந்தாகினியென்னும் பெயருடைய
தாதலை"ஓதப்புனற்பொன்னிநன்னீரரங்கருலகளந்த, பாதத்துநீர்விண்படி
பிலமூன்றிலும் பால்புரைவெண், சீதத்தரங்க மந்தாகினியாகிச்
செழுங்கங்கையாய், மேதக்கபோகவதியாகிநாளும் விழுகின்றதே"
என்றதனாலும்அறிக. சிகரம்-உச்சி.  நிகரம் -கூட்டம்: விழுங்குதலென்று
பொருள் கொள்வாருமுளர்.  அகில்-புகைக்கு ஆகுபெயர்.  முதலடியில்,
வகை கொண்டுயர்தோளாரவர் என்ற பாடத்துக்கு, வகை கொண்டு
உயர்தோளார்-அழகைக் கொண்டு உயர்ந்த தோள்களையுடையவர்களாகிய,
அவர் - அவ்விந்திரனும் அருச்சுனனும் என்க.                  (154)

155.-அருச்சுனனுக்குத்தனியேவசிக்கும்படி
மாளிகையமைத்துஈதலும் சூரியன் அத்தமித்தலும்.

தருக்குங்களியமுதுண்டவர் தனிவாழ்வுறுமெல்லைச்
சுருக்குங்கணமணிநீள்வெயில் சுடர்மாளிகைவேறொன்று
இருக்கும்படிவிசயன்பெற வீந்தான்விடையதுகண்டு
அருக்கன்குடகடன்மாளிகை யணிதேரொடடைந்தான்.

     (இ-ள்.) அவர்- அவ்விருவரும்,-தருக்கும்களி அமுது உண்டு-
மிகுந்தகளிப்பைத் தருகின்ற அமிருதத்தைப்போலினிய உணவைப் புசித்து,
தனி வாழ்வுறும் எல்லை-தனியேவாழ்கின்ற சமயத்தில்,-சுருக்கும்கணம்
மணி நீள் வெயில் சுடர் மாளிகை வேறு ஒன்று-அடக்கிப் பதிக்கப்பட்டுள்ள
கூட்டமான இரத்தினங்களினது நெடுந்தூரத்திலுஞ் சென்று விளங்குகின்ற
சூரியனொளிபோன்ற ஒளி பிரகாசிக்கப்பெற்ற வேறொருகிருகத்தை,
இருக்கும்படி-(தான்)வசிக்கும்படி, விசயன்-அருச்சுனன், பெற -  பெறுமாறு,
விடை ஈந்தான்-(இந்திரன் அவனுக்கு) உத்தரவு கொடுத்தனுப்பினான்;
அதுகண்டு-அங்ஙனம் இந்திரன் அருச்சுனனுக்குத் தனிமாளிகை
கொடுத்ததைப் பார்த்து, (தானுந் தனி மாளிகையையடைய விரும்பினான்
போல), அருக்கன் - சூரியன் குடகடல் மாளிகை-மேல்கடலாகிய வீட்டை,
அணி தேரொடு