159.-ஊர்வசியைஅழைத்து அருச்சுனன் உபசரித்தல். ஓராயிரமகல்வான்மணி யொக்குந்தவிசிடையே ஈராயிரதீபங்க ளெறிக்குஞ்சுடரெழவே வாராயிரமுகமாநுகர் மஞ்சேநிகர்செங்கண் பேராயிரமுடையான்மக னெதிர்கொண்டிவைபேசும். |
(இ-ள்.) ஓர்ஆயிரம் அகல் வான் மணி ஒக்கும்-பெரிய ஓராயிரஞ் சூரியர்களையொத்திருக்கின்ற [மிகவும்விளங்குகிற],தவிசிடையே- ஆசனத்திலே, ஈர் ஆயிரம் தீபங்கள் எறிக்கும் சுடர் எழஏ-இரண்டாயிரம் விளக்குகள் வீசுகின்ற ஒளி யுண்டாக, வார் ஆயிரம் முகம் ஆ நுகர் மஞ்சுஏ நிகர்-நீரைப் பலமுகமாக மொண்டு குடித்ததொரு காளமேகத்தை யொத்து விளங்குகிற, செம் பேர் கண் ஆயிரம் உடையான் மகன்-சிவந்த பெரிய ஆயிரங் கண்களையுடையஇந்திரனது குமாரனானஅருச்சுனன், எதிர் கொண்டு - (அவளை)எதிர்சென்று உபசரித்து அழைத்துவந்து, இவை பேசும்-இவ்வார்த்தைகளைச்சொல்வான்;(எ-று.)-அவைமேலேகாண்க. சூரியமண்டலம்பெரிய உருவமாயிருத்தல்பற்றி, 'அகன்வான்மணி' என்றது;நெடுந்தூரத்திலுஞ் சென்று விளங்குதல் பற்றியுமாம். ஆகாயத்திற்கு இரத்தினம்போல விளக்கந் தருதலால், வான்மணியென்று சூரியனுக்குப் பெயர். இரண்டாமடியை-அருச்சுனன் மாளிகையிடத்து எரிகின்ற விளக்குகளின் பிரகாசத்தைக் கூறுகின்றதாகவாயினும், அருச்சுனனது உடலொளியை வருணித்ததாகவாயினும் கொள்க. மஞ்சேநிகர்என்ற அடைமொழியை மகனுக்கும் ஆயிரங்கண்ணுடையானுக்கும், இயைக்கலாம். அகலிகையைத் தழுவிய இந்திரனுக்குக் கௌதமமுனிசாபத்தால்உடம்பு முழுதுமுண்டாகிய பெண்குறி பின்பு அவரது அனுக்கிரகத்தால் பிறருக்குஆயிரங்கண்களாகத் தோன்றுவதாயிற்று. மஞ்சூர் தருநயனம் என்றும்பாடம். (159) 160.-அருச்சுனன்'நீவந்த காரணம் என்?'என்று வினாவிஅவள் தாளில் விழுதல். எந்தைப்பெயர்புனையாயுவெனும்பேர்முடியிறைவன் தந்தைக்குயிர்நிகராகிய தளவத்திருநகையாய் கொந்துற்றெழுகுழலாய்குழ னிகராகியமொழியாய் வந்துற்றதெனெனவன்னைமலர்த்தாள்களில்வீழ்ந்தான். |
(இ-ள்.)'எந்தை- எமதுவமிசபிதாவாகிய, பெயர் புனை-பிரசித்தி பெற்ற, ஆயு எனும் பேர்-ஆயுஎன்னும் பெயருள்ள, முடி இறைவன்- கிரீடத்தையுடைய அரசனது, தந்தைக்கு-பிதாவான புரூரவசக்கரவர்த்திக்கு, உயிர் நிகர் ஆகிய-பிராணனையொத்து மிக அன்புடையமனைவியான, தளவம் திரு நகையாய்-முல்லைமலர்போல்மிகவெண்மையாகவிளங்குகிற அழகிய பற்களையுடையவளே!கொந்து உற்று எழு குழலாய்- பூங்கொத்துக்கள் பொருந்தி |