92.- மீண்டும் பொரத்தொடங்கிய தருமன் கர்ணனால் சோர்ந்து முதுகுகொடுத்தல். உறுதியுடன்மற்றொரதமிசைகொளுமுதிட்டிரனு மொருகையில் வயச்சிலையுமொருகையில்வடிக்கணையும், விறலினொடெடுத்தெதிர்செல்பொழுதருண்மிகுத்தமொழி வெயிலவனளித்தருளும்விதரணகுணக்குரிசின், மறமுறவிடுத்தகணைபொடியுறவியற்றியவன் மதுமல ருரத்தைவழிவழிதுளைபடுத்துதலி, னெறிபடைவிடுத்திரதமிசையுறவிளைத்துமுதுகிடவறன்மகற்கிரவி மகனிவையுரைத்தனனே. |
(இ-ள்.) உறுதியுடன் - வலிமையோடு, மற்று ஒர் ரதம் மிசை கொளும் - வேறொரு தேரின்மேல் ஏறிக்கொண்ட, உதிட்டிரன்உம் - தருமனும், ஒருகையில் - இடக்கையில், வயம் சிலைஉம் - வெற்றியைத்தருகிற வில்லையும், ஒரு கையில் - வலக்கையில், வடி கணை உம் - கூர்மையான அம்புகளையும், விறலினொடு எடுத்து- பராக்கிரமத்தோடு எடுத்துக்கொண்டு, எதிர் செல்பொழுது - எதிரிற் செல்கிறபொழுதில், அருள் மிகுத்த மொழி - கருணை மிகுந்து தோன்றுகிற இன்சொற்களையுடைய, வெயிலவன் அளித்தருளும் - சூரியபகவான் பெற்றருளிய, விதரணம் குணம் குரிசில் - தானகுணத்தையுடைய வீரனான கர்ணன், மறம்உற விடுத்த - (அத்தருமன்) வலிமைபொருந்த விட்ட, கணை- அம்புகளை, பொடி உற இயற்றி - (தன்கணைகளாற்) பொடியாம்படி செய்து, அவன் மது மலர் உரத்தை - அத்தருமனது தேனையுடைய பூமாலைகளைத் தரித்த மார்பை, வழி வழி துளைபடுத்துதலின் - இடந்தோறும் துளைதுளையாகச்செய்ததனால், (தருமன்), உற இளைத்து - மிகச்சோர்ந்து, இரதமிசை - தேரின் மேல், எறி படை (பகைவர்மேல்) எறிகிற ஆயுதங்களை, விடுத்து - போகட்டுவிட்டு, முதுகு இட - முதுகு கொடுக்க, (அப்பொழுது), அறன் மகற்கு - தருமபுத்திரனுக்கு . இரவி மகன் - கர்ணன், இவை உரைத்தனன் - இவ்வார்த்தைகளைச் செல்வானானான்; (எ -று.) அது மேற்கவியிற் கூறுகின்றார். ஒருரதம் - ஒரதம் எனத் தொகுத்தல் விகாரம். தானத்துக்கு இன்சொல் முக்கியமாக வேண்டுவதாதலின், 'அருண்மிகுத்தமொழி விதரண குணக்குரிசில்' என்றார்; "இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக" என்பர். (183) 93.- கர்ணன் நீ புறமிடுதல் தகாதெனல். உரையுடையைகற்றகலையுணர்வுடையைதக்கமதி யுளமுடையை மிக்ககிளையுறவுடையைசத்யகுண, வரையுடையையெத்திசையும்வழுவறவளர்த்தபுகழ்வரிசைகொளறத் திளைஞர்வழிபடு மதிப்புடையை, தரைமுழுதுமுத்தநிலவுமிழ்குடைநிழற்றவொருதனிநனிபுரக்குமுயர் தலைமைபெறுகிற்றிபகை, கரையழியவுற்றபொழுதுயிர்கொடுபுறக்கிடுதல்கடனலவுனக்குநிலை கருதியணிநிற்றியெனா. |
இதுவும் மேற்கவியும் - ஒருதொடர். (இ - ள்.) 'உரை உடையை - புகழை யுடையவனாயிருக்கிறாய்; கலை கற்ற உணர்வு உடையை - (படிக்கத்தக்க) நூல்களைப் படித்ததனாலுண்டாகிய நல்லறிவை யுடையாய்; தக்க மதி உளம் உடையை - தகுந்த இயற்கையறிவோடுகூடிய மனத்தையுடையாய்; மிக்க |