பக்கம் எண் :

125

வென்றிவார்சிலைமீளியுந்தன்பெருந்
துன்றுகோலஞ் சிறந்திடத்தோன்றினான்.

     (இ - ள்.)என்று - என்றுசொல்லி, வானவர் யாவர்உம்-தேவர்கள்
எல்லாரும், ஏத்த - துதிக்க,-அவள் - ஊர்வசி, அன்று - அப்பொழுது,
அவற்கு - அந்த அருச்சுனனுக்கு, அ வரம் - அந்த வரத்தை,
கொடுத்தாள்-;(உடனே சாபந்தணிந்து), வென்றி வார் சிலைமீளிஉம் -
வெற்றியைத்தருகிற நீண்ட வில்லின்தொழிலில் வலியவனான
அவ்வருச்சுனனும், தன் பெரு துன்று கோலம் சிறந்திட தோன்றினான்-
தனது பெருமை பொருந்திய இயற்கைவடிவம் விளங்க வெளிப்பட்டான்;
(எ-று.)

     இவ்வரத்தின்உதவியினாலேபின்பு அஜ்ஞாதவாசகாலத்தில்
அருச்சுனன் பிருகந்நளையென்னும்பேடிவடிவ மாவனென்று அறிக. (176)

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்முற்றிற்று.

-----

இரண்டாவது

நிவாதகவசர்காலகேயர் வதைச்சருக்கம்.

     நிவாதகவசர்காலகேயர் என்னும் அசுரவீரர்களது (அருச்சுனனாற்
செய்யப்பட்ட) கொலையைக்கூறுகின்றதொரு நூற்கூறுபாடு என்பது,
பொருள்.  நிவாதகவசர் என்பதற்கு - (மிக நுண்ணிதான இடத்திலும்
தடையின்றிச் செல்லும் வல்லமையுடைய) காற்றும் உள்ளே நுழையமாட்டாத
[மிகவுறுதியான]கவசத்தை யுடையவர் என்றும், காலகேயர் என்பதற்கு-
காலகையென்னும் அசுரமகளது மக்கள் என்றும் பொருள்.  நிவாதகவசர்
என்பதில், நி - எதிர்மறையுணர்த்தும் வடமொழி உபசர்க்கம்;வாதம்-காற்று;
கவசம்-இரும்பு முதலியவற்றாலாகியஉடம்பின்மேற்சட்டை.  இவர்கள்,
கடலிடையேயுள்ள தோயமாபுரமென்னும் பெருநகரத்தில் தொகுதியாய்
வாசஞ் செய்பவர்கள்.  காலகேயர் - இது, வடமொழித் தத்திதாந்தநாமம்;
இவர்கள் அந்தரத்திடையேயுள்ள இரணியபுரமென்னும் நகரத்தில்
தொகுதியாய் வாசஞ்செய்பவர்கள்.  பிரமன் முதலிய தேவர்களைக்குறித்துப்
பெருந்தவஞ்செய்து அளவிறந்த வரங்களைப்பெற்று, அவ்வரபலத்தாலும்,
புஜபலம் ஆயுதபலம் சேனாபலம்முதலியவற்றாலும்தமக்கு ஒப்பு உயர்வு
இன்றி மிகச் செருக்குற்று, இந்திரன் முதலிய தேவர்களுக்கு இடைவிடாமல்
இடையூறு பல இயற்றி வந்த இவ்வசுரர்களைஅவ்விந்திராதிதேவர்களின்
வேண்டுகோளினால்அருச்சுனன் தான் அருந்தவம்புரிந்து பரமசிவனிடத்துப்
பெற்ற பாசுபதாஸ்திரம் முதலியவற்றின் உதவியைக்கொண்டு பொருது
ஒழிக்கிறான்.

     நிவாதகவசர்காலகேயர் - அல்வழிப்புணர்ச்சி, உம்மைத் தொகை,
காலகேயர்வதை-வேற்றுமைச்சந்தி, ஆறாம்வேற்றுமைத்