பக்கம் எண் :

126பாரதம்ஆரணிய பருவம்

தொகைநிலைத்தொடர்;செயப்படுபொருளில் வந்தது.  வதைச் சருக்கம்-
வதையைப்பற்றிய சருக்கம் என விரித்தால் இரண்டனுருபும் பயனும்
உடன்தொக்க தொகையாம்.  வதம்-வதை என ஈறுதிரிந்தது:சாமரம்-சாமரை,
காலம்-காலைஎன்பனபோல.  இப்பிரிவுக்கு 'இரணியபுரவாசியர்
வதைச்சருக்கம்'எனப் பெயரிட்டு வழங்கினாருமுளர்;தோயமாபுரவாசியர்
வதையையும் முதலிலே முக்கியமாகக் கூறுகின்றதொரு பகுப்பிற்கு
ஏகதேசத்தாற் பெயர்வைத்தல் பொருந்தாது.  இச்சருக்கத்தில் முதல் 104-
பாடல்கள் தோயமாபுரத்து அசுரரது வதத்தையும், அதற்குமேல் 42
செய்யுட்கள் இரணியபுரத்து அசுரர்களது வதத்தையும் உணர்த்துமென
உணர்க.  வடமொழி வியாசபாரதத்திலும் ஆரணிய பருவத்தினுள்ளடங்கிய
நிவாதகவச யுத்தபருவத்தில் ஐந்து அத்தியாயங்களில் நிவாதகவசவதமும்,
ஓரத்தியாயத்தில் இரணியபுர தைத்தியவதமும் கூறப்பட்டுள்ளன.

1.*-உருப்பசியினிடம்வரம்பெற்றஅருச்சுனனை
யுடன்கொண்டுஇந்திரன் சுதன்மையில் வீற்றிருத்தல்.

அவ்வரந்தனக்கு நல்கு மன்னைதாள்வணங்கும் வென்றிக்
கைவரு சிலையினானைக்கடவுளர்க் கிறைவன் கொண்டு
மொய்வருசுரர்கள் சூழ முதன்மைசேர் சுதன்மை யெய்தி
வெவ்வரிமுகத்த பீடம் விளங்கவீற் றிருந்த காலை.

இதுவும், மேற்கவியும்- ஒரு தொடர்.

     (இ - ள்.) அவரம்-(பேடிவடிவம் தான் வேண்டுங்காலத்தில் ஒரு
வருஷகாலம் வந்தடையும் என்ற) அந்த வரத்தை, தனக்கு நல்கும்-தனக்குக்
கொடுத்த, அன்னை-தாயாகியஊர்வசியினது, தாள் - பாதங்களை,
வணங்கும் - நமஸ்கரித்த, வென்றி கை வரு சிலையினானை- ஜயத்தைத்
தருகின்ற (தன்) கையிற் பொருந்திய (காண்டீவமென்னும்) வில்லையுடைய
அருச்சுனனை,கடவுளர்க்கு இறைவன் - தேவர்களுக்கு அரசனான
இந்திரன், கொண்டு - அழைத்துக்கொண்டு, மொய் வரு சுரர்கள் சூழ -
நெருங்கி வருகின்ற தேவர்கள் (தன்னைச்)சுற்றிலுமிருக்க, முதன்மை சேர்
சுதன்மை எய்தி - (சபாமண்டபங்களெல்லாவற்றினுந்) தலைமைபெற்ற
சுதர்மை என்னுந் தேவசபாமண்டபத்தை அடைந்து, வெவ் அரி முகத்த
பீடம் விளங்க - கொடுந்தன்மையையுடைய
_____________________________________________________
     * இந்தச்சருக்கத்துக்குக் காப்புச்செய்யுளாக ஒரு சாரார் வழங்கிய
பாடல் வருமாறு:-

         செய்யவாய்கரியவாட்கண் சிற்றிடைபெருந்தேரல்குல்
         துய்யவாய்மகடன்முன்றில் தொகுமருதிறுத்துத்தாரு
         வய்யமீமிசைநட்டோர்புள் வகிர்ந்துபொற்சிறைப்புள்ளூரும்
         அய்யனேயன்றோதொல்லையருமறைக்கிறுதியாவான்.