அளிக்க, உடனேநெருப்புப் பற்றி எரித்தது என்பது, கதை. அங்ஙனம் எரித்திடுவதை அறிந்த இந்திரன் அக்கினியை அவிக்கும் பொருட்டு ஏழு மேகங்களையும்ஏவ அவையனைத்தும்ஒருங்கே எழுந்துவந்து பெய்த அடைமழை முழுவதையும் அருச்சுனன் அம்புக் கூட்டங்களைக்கொண்டு அமைத்த பெரும்பந்தரினால்தடுத்துவிட்டானென்பதையும், அதுகண்டு சினந்து தேவசைனியத்துடனே வந்து பொருத இந்திரனைப்பார்த்தன் புறமிட்டோடச் செய்தன னென்பதையும் கீழ்க் காண்டவதகனச் சருக்கத்துக் காண்க. (178) 3.-இரண்டுகவிகள் -ஒருதொடர்:தேவர்கள் அருச்சுனனைச்சம்மானிக்க, இந்திரன் கற்பகப்பூமாலைசூட்டிமுடிகவித்தல். அவ்வுரைகேட்டதேவ ரமகிழ்ந்தவனுக்கன்பால் திவ்வியமறையின்மிக்க தெக்கிணைபலவுஞ்செய்தார் செவ்வியதாதைதானுஞ் சேணதித்தூநீராட்டி விவ்விரவாதவாசத் தாமமும்விழைந்துசூட்டி. |
(இ-ள்.) அஉரை - அந்த (இந்திரனது) வார்த்தையை, கேட்ட - செவியுற்ற, தேவர் - தேவர்கள், அகம் மகிழ்ந்து - மனஞ் சந்தோஷித்து, அவனுக்கு - அவ்வருச்சுனனுக்கு, அன்பால் - அன்பினால்,திவ்வியம் மறையில் மிக்க தெக்கிணைபலஉம் செய்தார் - தெய்வத்தன்மையுள்ள வேதங்களில் (சுரரல்லாதார்க்குச் செய்யத்தக்கனஎன்று) மிகுதியாகச் சொல்லியுள்ள பலவகைச் சன்மானங்களையுஞ்செய்தார்கள்;செவ்விய தாதை தான்உம் - நற்குணங்களையுடைய(அருச்சுனனது) தந்தையாகிய இந்திரனும், சேண் நதி தூ நீர் ஆட்டி - ஆகாசகங்காநதியினது பரிசுத்தமான தீர்த்தத்திலே (அருச்சுனனை)ஸ்நானஞ்செய்வித்து, வி விரவாத வாசம் தாமம்உம் விழைந்து சூட்டி - வண்டுகள் மொய்க்காத வாசனையையுடைய(கற்பகப்பூ) மாலையையும்(அவனுக்கு) விரும்பி அணிவித்து,-(எ-று.)-மேற்கவியில் 'கவித்தான்'என்பதோடு முடியும். தேவலோகத்துப்பூமாலையில்வாட்டமும் வண்டுமொய்த்தலும் இல்லையெனஅறிக. இனி, இரண்டாம் அடிக்கு - சிறந்த வேதமந்திரங்களைக்கொண்டுமிகுந்த ஆசீர்வாதங்களைச்செய்தார்கள் என்றும் பொருள் கொள்ளலாம். வேதத்துக்குத் தெய்வத்தன்மையாவது- செய்யத்தக்கனவும் தகாதனவுமாகிய நன்மை தீமைகளைவிதி விலக்குகளால் தவறாமல்தெரிவித்து யாவராலுஞ் சத்தியமான சிறந்த பிரமாணமென்று அங்கீகரிக்கப்படுதல். மறை-மறைந்த பொருளையுடையது. 'அகமகிழ்ந்து' என்னும் சினையின்வினை,'செய்தார்'என்னும் முதலின்வினையைக் கொண்டது;[நன்வினை- 29.]தெக்கிணை- தக்ஷிணா,பலவும், உம்மை - முற்றுப் பொருளது. செவ்வி - பண்புப்பெயர்;இ - விகுதி:வி- விகுதியெனவுமாம். மூன்று நான்காம் அடிகளிலுள்ள உம்மை இரண் |