டும்-இறந்தது தழுவியஎச்சப்பொருளன. சேண் - வானம் 'தூய்நீர்' எனவும் பாடம். வி-வடசொல், பறவைப் பொதுப் பெயர்: இது இங்கே, சிறப்பாய் வண்டு என்னும் ஒருசாதிப் பறவையைக் குறித்தது. அகமென்னும் உள்ளிடப் பெயர், அங்கு இருக்கின்ற மனத்திற்கு ஆதலால் இடவாகுபெயர். (179) 4. | ஆயிரங்கதிருந்திங்க ளனந்தமுமடங்கமேல்மேல் காய்கதிர்விரிவதியார்க்குங் கருத்துறக்காணவொண்ணாச் சேயொளிதவழ்வதாகித் திசைமுகன்றனக்குநல்கும் மாயிருங்கிரணரத்ந மவுலியுங்கவித்தானன்றே. |
(இ-ள்.)ஆயிரம் கதிர்உம் - அநேகசூரியர்களும், திங்கள் அனந்தம்உம் - அநேகசந்திரர்களும், அடங்க - ஒளிகுறையும்படி, மேல் மேல் காய் கதிர்விரிவது - மிகவும் அதிகமாக விளங்குகின்ற கிரணங்கள் வீசுவதும், யார்க்குஉம்-எவருக்கும், கருத்து உற - மனம்பொருந்த காண ஒண்ணா- பார்த்தற்கு முடியாத, சேய்ஒளி-நெடுந்தூரத்துஞ் சென்று விளங்குகின்ற பிரகாசம், தவழ்வது-தங்குவதும், ஆகி-ஆய், திசைமுகன் தனக்கு நல்கும்-நான்கு முகங்களையுடையபிரமதேவனால்தனக்கு (முன் ஒருகாலத்தில்) சூட்டப்பட்ட, மா இரு கிரணம் ரத்நம் மவுலிஉம்-மி அதிகமான ஒளியையுடைய நவரத்தினங்களையும்பதித்துச் செய்யப்பட்ட கிரீடத்தையும், கவித்தான் - (அருச்சுனனுக்கு இந்திரன்) சூட்டினான்;(எ-று.) அன்றே - ஈற்றசை. முச்சுடர்களுள்மற்றையிருசுடர்களாகிய சந்திர அக்கினியர்களைப்போலப்பதினாறுஏழு கிரணங்களையுடைத்தாகாமே ஆயிரங் கிரணங்களையுடைத்தாய்அக்கிரணங்களுட் சிலவற்றை அவ்விரு சுடருக்குங் கொடுத்து வாங்குகிற சிறப்புப்பற்றி, 'கதிர்'என்று சூரியனுக்குப் பெயர். ஆயிரம் என்றது. மிகப்பலவாகிய எண்ணிற்கு ஒன்று எடுத்துக்காட்டியவாறு. ஆயிரங்கதிர், திங்களனந்தம் என்பன - இல்பொருள்கள். இனி, ஆயிரங்கதிர்-ஸஹஸ்ரகிரணனாகியசூரியனுக்குப் பண்புத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித் தொகையாகவுமாம். ந+அந்தம்=அநந்தம்;அளவிறந்தன என்றுபொருள். உம்மைகள், எண்ணுப்பொருளன. விரிவதி யார்க்கும் - குற்றியலிகரம். காணவொண்ணாமைக்குக்காரணம், மிகுந்த பிரகாசத்தாற் கண்களுக்குக் கூச்சந்தருதல். சேயொளி - சேய்மையென்னும் பண்புப்பெயர், ஈறுபோயிற்று;இனி செம்மையென்பது ஈறுபோய் ஆதிநீண்டு முன்நின்ற மெய் திரிந்ததாகக் கொண்டு, சிவந்த ஒளி யென்றலும் ஒன்று. திசைமுகன் - நான்கு திக்கையும் நோக்கும் நான்கு முகமுள்ளவன். ரத்நம் - வடமொழி விகாரப்படாமே நின்றது. மா + இரு=மாயிரு;ஒருபொருட்பன்மொழி; உரிச்சொற் புணர்ச்சி. இரு - பண்படி. 'மவுலியும்'என்ற உம்மை, கீழிற்கவியை நோக்கிவந்த இறந்தது தழுவிய எச்சப் பொருளது; உயர்வுசிறப்பாகவுமாம். மவுலி = மௌலி: முதற்போலி;தலையின் பெயராகிய இது, இடவாகுபெயராய், அதில் அணி |