யுங் கிரீடத்தைஉணர்த்திற்று. இக்கிரீடத்தை அணிந்ததுபற்றியே அருச்சுனனுக்குக் கிரீடீயென்று ஒருபெயர் நிகழ்ந்தது;அனந்தமும் மடங்க என்றும் பதம் பிரிக்கலாம். (180) 5.-அருச்சுனனுக்குத்தேவேந்திரன் சிறப்புச்செய்தல். ஆடையுங்கலனுந்தெவ்வை யடுந்திறற்படையுநல்கி ஏடவிழலங்கலானோராசனத்திருத்தியென்றும் தேடுதற்கரியதூய வமுதுசெம்பொற்கலத்தில் கூடவுண்டமரர்க்கெல்லாங் குரிசிலாஞ்சிறப்புஞ்செய்தான். |
(இ-ள்.) ஏடுஅவிழ் அலங்கலான் - பூவிதழ்கள் மலர்கின்ற மாலையையுடையஇந்திரன்,-ஆடைஉம்-வஸ்திரங்களையும்,கலன்உம் - ஆபரணங்களையும்,தெவ்வை அடும் திறல் படைஉம் - பகைவரைக் கொல்லவல்ல வலிமையையுடைய ஆயுதங்களையும்,நல்கி- (அருச்சுனனுக்குக்) கொடுத்து,-ஓர்ஆசனத்து இருத்தி - (தான்) இருக்கின்றதொரு ஆசனத்தில் தானே (அவனையுங்கூட) இருக்க வைத்து, என்றுஉம் தேடுதற்கு அரிய தூய அமுது - எந்நாளுந் தேடியடைதற்கு அருமையான பரிசுத்தமான அமிருதத்தை, செம்பொன் கலத்தில் - சிவந்த பொன்னினாலாகியபாத்திரத்திலே, கூட உண்டு - அவனுடனே ஒக்க இருந்து நுகர்ந்து, அமரர்க்கு எல்லாம் குரிசில் ஆம் சிறப்புஉம் செய்தான் - தேவர்களெல்லோருக்கும் அரசனாகின்றசிறப்பையும் (அருச்சுனனுக்குச்) செய்து வைத்தான்;(எ-று). தேவேந்திரன்தன்குமாரனானஅருச்சுனனுக்குத் தன்னாசனத்தில் அருத்தாசனங் கொடுத்து அவனைக்கூடவைத்துக்கொண்டு அமிருதபானம் பண்ணி அவனையும்அமுதுசெய்வித்து அவனைத்தேவர்களுக்கு இளவரசாக்கினானென்பதுகருத்து. இனி, அமரர்க் கெல்லாங்குரிசில்- தேவேந்திரன், ஏடவி ழலங்கலான்-அருச்சுனனை,ஓராசனத்திருத்தி- வேறொருஆசனத்தில் இருக்கவைத்து, அமுது கூட உண்டு - அமிருதம்போல மிக வினிய உணவை அவனோடுபுசித்து, ஆம் சிறப்பும் செய்தான்-தக்க சன்மானத்தையுஞ் செய்தான் என உரைப்பாருமுளர். கலன் - கலம்: மகரனகரம் மாறி வருஞ்சொல்: இங்கே, கலன் - அணிகலன். 'மந்த்ரத்துடனடற்படையுநல்கி'என்ற பாடத்துக்கு - அஸ்திரம் சஸ்திரம் என்னும் இருவகை ஆயுதங்களையும்அளித்தமை கூறினாரென்க: இன்னும் இதிலே எய்வன, எறிவன, வெட்டுவன, குத்துவன என்னும் பலவகைப் படைகளும் அடங்கும். (அஸ்திரம்- மந்திரத்துடனே பிரயோகிக்கப்படுகின்ற ஆயுதமென்றும், சஸ்திரம்-மந்திரமின்றிக்கேவிடப்படுகின்ற ஆயுத மென்றும் வேறுபாடு அறிக; அத்திரம் - கைவிடு படை, சத்திரம் - கைவிடாப்படை எனவும் வேறுபாடு கூறுவர்) கலம் - உண்கலம். குரிசில் - பெருமையிற் சிறந்தவன்;ஆண்பாற் சிறப்புப்பெயர்:[நன்- பெயர் 69.] (181) |