பக்கம் எண் :

136பாரதம்ஆரணிய பருவம்

யுடைய, கவனம் வாம்பரிஉம்-விரைந்துசெல்லும் நடையையுடைய
தாவுமியல்புள்ள குதிரைகளையும்,தேர்உம்-தேரையும், கணைஉம் -
அம்புகளையும், கார்முகம்உம் - (காண்டீவமென்னும்) வில்லையும்,
பெற்றாய்-;(எ-று.)

     மூன்றினுக்கு -உருபுமயக்கம்;உம்மை - இனைத்தென்றறிபொருளில்
வந்த முற்றும்மை. சிவன் என்பதற்கு - (தன் அடியார்களுக்கு) மங்களத்தைச்
செய்பவனென்றுபொருள்;சிவம் - சுபம்.  தழலளித்த என்பதைத்
தேர்முதலியவற்றுக்குங் கூட்டுக. வாவும் பரி என்றது, வாம்பரி எனச்
செய்யுமெனெச்சம் ஈற்றுமிசை யுகரம் மெய்யுடன் கெட்டது.           (186)

11.பிரமனேமுதலாவெண்ணும் பேர்பெறுந்தேவரீந்த
வரமிகுமறையுங்கொற்ற வான்பெரும்படையும்பெற்றாய்
அருமறைமுறையேபார்க்கி னமரர்மற்றுன்னினுண்டோ
திருவரும்வின்மைவீர செப்புவதொன்றுகேளாய்.

     (இ-ள்.)(மேலும்), பிரமன்ஏ முதல் ஆ எண்ணும் - பிரமன் முதலாக
எண்ணப்படுகிற, பேர் பெறும் தேவர் - புகழைப் பெற்ற தேவர்கள், ஈந்த -
கொடுத்தருளிய, வரம் மிகு மறைஉம் - வரங்களாக மிகுந்த
மந்திரங்களையும்,கொற்றம் வான் பெரு படைஉம் - வெற்றியைத்தருகின்ற
உயர்ந்த பெரிய ஆயுதங்களையும்,பெற்றாய்-;அரு மறை முறைஏ
பார்க்கின்-(அறிவதற்கு) அருமையான வேதங்களிற் கூறிய முறையின்படியே
நோக்குமிடத்து, உன்னின் மற்று அமரர் உண்டுஓ - உன்னைக்காட்டிலும்
(சிறந்த) தேவர்கள் வேறு உளரோ?  [இல்லை];திரு வரும் வின்மை வீர-
ஜயலக்ஷ்மி வந்தடைதற்குக் காரணமான வில்லின் தொழிலில்
வல்லமையுள்ளவனே!  செப்புவது ஒன்று கேளாய்-(யான்) சொல்வதொரு
வார்த்தையைக் கேட்பாயாக;(எ-று.)-அதுமேற்கவியிற் கூறுகின்றார்.

     பிரமன் முதலியதேவ ரீந்த மறையும் படையும் - பிரமாஸ்திரம்
முதலியன.  ஜாதியொன்றைக் கொண்டே யன்றிக் கல்வி குணம்
முதலியவற்றால்ஒருவனைநன்குமதிக்க வேண்டுமென்பது நூற்றுணிபு
என்பான், 'அருமறைமுறையே பார்க்கி னமரர்மற்றுன்னிணுண்டோ'
என்றான். ஈந்த - இழிந்தோனேற்றற்கு வரும் வினை: [நன்-பொது-56.]
வரம் மிகு-சிறப்புமிக்க என்றுமாம்.  வின்மை - வில்லின்தன்மை. அருமறை
- (அளவிடுவதற்கு) அருமையான வேதமென்றுமாம்.         (187)

12.கற்றவர்கலைகள்யாவுங்கசடறக்கற்பித்தோர்கள்
பெற்றிடக்கொடுக்குஞ்செல்வ முண்டென்று பெரியோர்சொல்[வர்
கொற்றவவுனக்குநானுங்கூறுநற்குருவேயாகும்
உற்றவாறெனக்குநீயுமொருவரந்தருகவென்றான்.

     (இ-ள்.)'கற்றவர்- (நல்லாசிரியர்பக்கல்) கல்வி கற்ற மாணாக்கர்கள்,
கலைகள்யாஉம் கசடு அற கற்பித்தோர்கள் பெற்றிட - கல்விகள்
பலவற்றையும் குற்றம் நீங்க(த் தமக்கு)க் கற்றுக்