பக்கம் எண் :

நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கம்137

கொடுத்தஅவ்வாசிரியர்கள் பெறும்படி, கொடுக்கும் - (அவர்களுக்குக்)
கொடுக்கவேண்டிய, செல்வம்-குருதட்சிணையாகியதொருபொருள், உண்டு
உள்ளது',என்று-,பெரியோர்-(அறிவிற்)பெரியவர்கள், சொல்வர்-;
'கொற்றவ-வெற்றியையுடையவனே!உனக்கு-நானும்-,கூறும் நல் குருஏ
ஆகும் - (வில்வித்தையை) உபதேசித்த நல்ல ஆசிரியனேயாவேன்:
(ஆனதுபற்றி), உற்ற ஆறு - பொருந்திய முறைமைப்படியே, எனக்கு-,
நீயும்-,ஒரு வரம் தருக- (யான்) வேண்டுவதொருவரத்தைக்
கொடுக்கக்கடவை,'என்றான்- என்று (இந்திரன்) கூறினான்;(எ-று.)

     கீழ்ஐந்தாங்கவியில் 'அடற்படைநல்கி'என்றதனால்,இந்திரன்
அருச்சுனனுக்குக் குருவாயினான். குரு என்னும் வடசொல்லுக்கு -
(அஜ்ஞாநமாகிய மனத்தின்) இருளைப்போக்குபவனென்றுபொருள்: கு -
இருள், ரு - ஒழிப்பவன்.  கல்விக்குக் குற்றமாவது - ஐயந்திரிபுகள்;
ஐயமாவது-இதற்குப் பொருள் இதுவோ அதுவோ என்று பலபடக்கருதும்
சந்தேகம்: திரிபாவது - ஒன்றன்பொருளைவேறொன்றாகத்துணியும்
விபரீதம்.                                            (188)

13.-தேவர்கட்குமானுடர் செய்வதொன்றில்லையாயினும்
மனத்திலுள்ளதைக்கூறுக என்று அருச்சுனன்
வினாவல்.

தந்தைசொன்மகிழ்ந்துகேட்டுத் தனுவினுக்கொருவனான
மைந்தனுந்தேவர்க்கைய மானுடர்செய்வதுண்டோ
சிந்தையினிகழ்ந்ததொன்று செப்புகென்றவனுஞ்செப்ப
இந்திரன்றானுமீண்டுமின்னனபகரலுற்றான்.

     (இ-ள்.)தந்தை சொல் - பிதாவாகிய இந்திரனுடைய வார்த்தையை,
தனுவினுக்கு ஒருவன் ஆன மைந்தன்உம் - வில் வித்தையில்
ஒப்பற்றவனானகுமாரனாகியஅருச்சுனனும், கேட்டு-, மகிழ்ந்து-,'ஐய-
தந்தையே! தேவர்க்கு மானுடர் செய்வது உண்டுஓ - (மனிதர்களுக்குத்
தேவர்கள் வரங்கொடுப்பது மரபேயன்றித்) தேவர்களுக்கு மனிதர்கள்
செய்யக்கடவதொரு உதவி உள்ளதோ?  [இல்லையன்றோ](ஆயினும்),
சிந்தையில் நிகழ்ந்தது ஒன்று செப்புக-(உன்) மனத்திற் கருதிய ஒரு
காரியத்தைச்சொல்லுவாயாக',என்று-,அவன்உம் - அவ்வருச்சுனனும்,
செப்ப - சொல்ல,-இந்திரன்தான்உம்- இந்திரனும், மீண்டுஉம் - மறுபடியும்,
இன்னன - இவ்வார்த்தைகளை,பகரல் உற்றான்- சொல்லத்
தொடங்கினான்;(எ-று.)-அவற்றைமேல் மூன்றுகவிகளாற் கூறுகின்றார்.

     தனுவினுக்கு -உருபுமயக்கம்.  செப்புகஎன்னும் வியங்கோள்
வினைமுற்றின்ஈற்றுஅகரம் தொக்கது: வியங்கோளுக்கு இவ்விகாரம்
பெரும்பாலுஞ் செய்யுட்களில் வரும்.                         (189)