(இ-ள்.)நிவாதகவசத்தர் என்னும் பெயர் உடை - நிவாதகவசர் என்னும் பேரையுடைய, கொடிய - கொடுந்தன்மையுள்ள, நீசர்-கீழோராகிய அவ்வசுரர்கள்,-தவாதபோர் வலியின் - அழியாத யுத்த சாமர்த்தியத்துடனே, மிக்க தவத்தினர் - மிகுந்த தவவலிமையுடையவர்கள்; சாபம் வல்லோர் - வில்வித்தையில் வல்லவர்கள்;சுவாதம்ஏ வீசி - மூச்சுக்காற்றையே பெரிதாகவிட்டு, எல்லா உலகைஉம் - உலகங்களெல்லாவற்றையும், துளக்குகிற்போர்-நடுங்கச் செய்யவல்லவர்கள்; விவாதம்ஏ விளைக்கும்சொல்லர் - போரையேயுண்டாக்குகின்ற கொடுஞ்சொற்களையுடையவர்கள்;வெகுளிஏ விளையும்நெஞ்சர் - கோபமே மேன்மேலுண்டாகின்ற மனத்தையுடையவர்கள்; (எ-று.) தவாத என்னும்பெயரெச்சத்தில், தபு என்பதன் மரூஉவாகிய தவு - பகுதி. போர்வலி - போரில்வல்லமை. சுவாதம் - ஸ்வாஸம்;வடசொல். விவாதம்-சொற்கலகம், தருக்கம், வழக்காடுதல். 16. | மற்றவரெனக்குநாளும் வழிப்பகையாகிநிற்போர் கற்றவர்வணக்கினாற்குங்கடக்கரும்வலியின்மிக்கோர் செற்றிடநின்னையன்றிச்செகத்தினிற்சிலர்வேறுண்டோ வெற்றிவெஞ்சிலைகொள்வீரவிவ்வரம்வேண்டிற்றென்றான். |
(இ-ள்.) மற்று- மேலும், அவர் - அவ்வசுரர்கள், எனக்கு-,நாள்உம் - தினந்தோறும், வழி பகை ஆகி நிற்போர்-பரம்பரையாக (த்தொன்று தொட்டு)ப் பகைவர்களாய் நிற்பவர்கள்;(அன்றியும்), கல் தவர் வணக்கினாற்குஉம்கடக்க அரும் வலியின் மிக்கோர் - மகாமேருமலையை வில்லாக வளைத்துக்கையிற்கொண்ட (அழித்தற்றொழிற்கடவுளாகிய) சிவபிரானுக்கும் வெல்லுதற்கு அருமையான வலிமையில் மிகுந்தவர்கள்; (அத்தன்மையரானவர்களை),செற்றிட - அழித்துவிடுதற்கு, நின்னைஅன்றி- உன்னையேயல்லாமல்,செகத்தினில் - உலகத்தில், வேறு சிலர் உண்டுஓ- வேறாகியசிலபேர் (வல்லவர்) உளரோ? [எவருமில்லை];வெற்றி வெம் சிலைகொள் வீர - ஜயத்தைத் தருகின்ற (பகைவர்க்குப்) பயங்கரமான காண்டீவ வில்லைக்(கையிலே) கொண்ட வீரனே! இ வரம் வேண்டிற்று - (அவ்வசுரர்களைநாசஞ் செய்தலாகிய) இந்தவரமே (யான் உன்னைத் தரும்படி) வேண்டியது, என்றான்- என்று இந்திரன் கூறினான்;(எ-று.) மற்று - வினைமாற்று;அசையாகவுங் கொள்ளலாம். நாளும், உம்மை - தொறுப்பொருளது. கல் - அதன் மயமான மலைக்குக்கருவியாகுபெயர். கடக்கரு - வினையெச்சவீறு,தொகுத்தல். "ஈறுபோதல்" [நன்-பத-9] என்ற இலேசினால்,அருமையென்னும் பண்புப்பெயர் ஈற்று ஐகாரம்மாத்திரங் கெட்டு 'அரும்'என நின்றது. மேருகிரிபரமசிவனுக்கு வில்லானது, திரிபுரசங்காரகாலத்தில்: தாரகாசுரனது புத்திரர்களாகிய வித்யுந்மாலி, தாரகாக்ஷன், கமலா |