தையுடையயோகா நுஷ்டானஞ் செய்கின்ற முனிவர்களும்(தனக்கு)ஒப்பாகப் பெறாத யுதிட்டிர ராசனும், தம்பிமார்உம்-(அவனுடைய)தம்பிகளும் கானம்ஏ-காட்டையே, தாங்கள் ஆளும் காசினி ஆக கொண்டார்-தாங்கள் அரசாளுகின்ற இராச்சியமாகக் கொண்டார்கள்[காட்டையேவாழிடமாகக் கொண்டார்கள் என்றபடி]; பாண்டவர்அரச ராதலால் 'கானமேகாசினியாகக் கொண்டார்' என்றார். தருமபுத்திரன் மெய்த்திருவந்து உற்றாலும் வெந்துயர்வந்து உற்றாலும் ஒத்திருக்குமுள்ளத்து உரவோனாதலாலும், தம்பிமார்கள் இளையபெருமாள்போலத் தந்தமையனாரெழுந்தருளியுள்ள இடத்தையே தமது இராச்சியமாக நினைக்கும் இயல்புடையர்களாதலாலும், கானமே தாங்களாளுங் காசினியாகக் கொண்டாரென்ற தென்னலாம். தெளிந்த அறிவுடையவனென்பது 'ஞானயோகிகளுமொவ்வாநரேசன்'என்பதன் கருத்து. ஞானமாவது-பிறப்புமுத்திகளையும் அவற்றின் காரணங்களையும் சந்தேக விபரீதங்களாலல்லாமல் உண்மையாக அறிதல். யோகமாவது - இயமம் நியமம் முதலிய உறுப்புக்களுடன் தவஞ்செய்தல். நரேசன்- குணசந்திபெற்ற வடமொழித்தொடர். கானம்-காநநம்என்ற வடசொல்லின் விகாரம். காசினி-காச்யபீ என்ற வடசொல்லின் விகாரமென்பர்: இருபத்தொருகால் அரசு களைகட்ட பரசுராமன் தான் வென்ற பூமியைப் பாவந்தொலையக் காசியபமுனிவருக்குத் தானஞ்செய்தானாதலால், பூமி, காசியபீயென்று பெயர் பெறும். (19) 20.-யாவரும்போனபின் வியாசமுனிவன் பாண்டவரிடம் வருதல். அவ்வனந்தன்னில்வந்த வரசெலாமகன்றபின்னர் வெவ்வனம்விடாதுமேவித் தவம்புரிவியாதனென்னுஞ் செவ்வனமுனைவன்வந்தே சேயவன்சேய்களான இவ்வனசரிதர்தம்மை யினைவுடனெய்தினானே. |
(இ-ள்.)அ வனந்தன்னில்-அந்தக் காமியவனத்தில், வந்து-,அரசு எலாம் - அரசர்களெல்லாம், அகன்ற பின்னர் - நீங்கின பின்பு,- வெவ்வனம்மேவி - கொடிய காட்டிற் பொருந்தி, விடாது தவம் புரி- இடைவிடாமல் தவத்தைச் செய்கின்ற, வியாதன் என்னும்-வியாசனென்று சிறப்பித்துச் சொல்லப்படுகிற செவ்வனம் முனைவன்-பல நன்மைகளையுமுடைய முனிவன், சேயவன் சேய்கள் ஆன-(தமது) புத்திரனாகிய பாண்டுவினது குமாரர்களான, இ வன சரிதர் தம்மை-காட்டில் வாசஞ்செய்கின்ற இவர்களை, இனைவுடன் - இரக்கத்துடன், வந்து எய்தினான்-வந்து அடைந்தான்; பாண்டவர்கள் நாட்டையிழந்து காட்டையடைந்தமையைக் கேள்வியுற்றுவந்தானாதலால், வியாசன் இரக்கத்தோடெய்தினான். வியாசன் - பராசரமகாமுனிவருக்கு மச்சகந்தியினிடம் பிறந்தவர்; பராசரரருளினால் பின்பு யோஜனகந்தியான தமது தாயின் கட்டளை |