க்ஷன் என்னும் மூவரும்மிக்க தவஞ்செய்து, மயனென்பவனாற்சுவர்க்க மத்திய பாதாள மென்னும் மூன்றிடத்திலும் முறையே பசும்பொன் வெண்பொன் கரும்பொன்களால் அரண்வகுக்கப்பட்டு ஆகாயமார்க்கத்திற் சஞ்சரிக்குந் தன்மையையுடைய மூன்று பட்டணங்களைப்பெற்று,மற்றும் பல அசுரர்களோடும் அந்நகரங்களுடனே தாம்நினைத்தஇடங்களிற் பறந்துசென்று பல இடங்களையும்பாழாக்கி வருகையில், அத்துன்பத்தைப் பொறுக்கமாட்டாத தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளால், சிவபெருமான், பூமியைத் தேராகவும், சந்திரசூரியர்களைத் தேர்ச்சக்கரங்களாகவும், நான்குவேதங்களைக்குதிரைகளாகவும், பிரமனைச் சாரதியாகவும், மகா மேருவை வில்லாகவும், ஆதிசேஷனை நாணாகவும், விஷ்ணுவை வாயுவாகிய சிறகமைந்து அக்கினியை முனையாகவுடைய அம்பாகவும், மற்றைத் தேவர்களைப்பிற போர்க்கருவிகளாகவும் அமைத்துக்கொண்டு, யுத்தசன்னத்தராகிச் சென்று போர்செய்ய யத்தனித்து, புன்சிரிப்புச்செய்து அசுரரனைவரையும்பட்டணங்களோடு எரித்தருளின ரென்பது, புராணகதை. (192) 17.-அருச்சுனன்இந்திரன்வேண்டுகோட்கு உடன்படுதல். செருவென்றமாற்றங்கேட்டுச் சிந்தையிலுவகைபொங்க மருவொன்றுமலங்கன்மார்பும் வாகுபூதரமும்பூரித்து உருவொன்றுமதனையொப்பனொருப்பட்டானுரைப்பதென்னோ திருவொன்றும்வண்மைவீரன் மறுக்குமோதேவர்கேட்டால். |
(இ-ள்.) உருஒன்றும் மதனைஒப்பான்-ரூபம் பொருந்திய மன்மதனை ஒப்பவனாகியஅருச்சுனன், செரு என்ற மாற்றம் கேட்டு-போர் என்ற வார்த்தையைக் கேட்டமாத்திரத்தில், சிந்தையில் உவகை பொங்க - மனத்திற் களிப்பு மிக, மரு ஒன்றும் அலங்கல்-வாசனைபொருந்திய பூமாலையையுடைய,மார்புஉம் - தனதுமார்பும், வாகு பூதரம்உம் - மலைகள்போன்றதோள்களும், பூரித்து-பருக்கப்பெற்று, ஒருப்பட்டான் - (அவ்வசுர வதத்திற்குச்) சம்மதித்தான்;உரைப்பது என்னோ- சொல்லவேண்டுவதென்ன? திரு ஒன்றும் - ஜயலக்ஷ்மி கூடியிருக்கப்பெற்ற, வண்மை - ஈகைக்குணத்தையுடைய, வீரன் - மகாவீரனாகஉள்ளவன், தேவர் கேட்டால் - (தன்னினுஞ் சிறந்த) தேவர்கள் (வரமொன்று) வேண்டினால்,மறுக்கும்ஓ - (மாட்டேனென்று) தடுத்துப்பேசுவானோ? [பேசானென்றபடி];(எ-று.) சுத்தவீரனாதலால்,யுத்தமென்றவளவில் அருச்சுனனுக்கு மனத்தில் மகிழ்ச்சி கிளர்ந்தது. மார்புந்தோளும் பூரித்தால், மகிழ்ச்சி பற்றிய மெய்ப்பாடு. 'மருவொன்றுமலங்கல்'என்பதை வாகுவுக்குங் கூட்டுக. அருச்சுனன் அசுரர்களைஅழித்தற்கு அமைந்தான் என்னும் பொருளை 'திருவொன்றும்வண்மை வீரன் மறுக்குமோ தேவர் கேட்டால்'என்பது சமர்த்தித்து நிற்றலால், தொடர்நிலைச்செய்யுட்குறியணி: சிறப்புப்பொருளும் பொதுப்பொரு |