பக்கம் எண் :

166பாரதம்ஆரணிய பருவம்

     (இ-ள்.) முன்- முன்னே, போர் தொறுஉம் - யுத்தங்கள் தோறும்,
வந்து-எதிர்த்துவந்து, முனைந்து-(உங்களோடு)பொருது, வெரீஇ-பயந்து,
வென் போகிய-முதுகுகொடுத்துத் தோற்றோடிப்போன,விண் உறை வீரர்
அலேன்-தேவலோகத்தில் வசிக்கின்ற வீரர்கள் போன்றவனல்லேன், (யான்);
(எத்தன்மையனெனின்), பொன் போலும் நும் மேனி-பொன்போலருமையான
உங்களுடம்பை, பொடி செய்திடா-தூளியாகச் செய்து விட்டு, பின்-அதன்
பின்பு, போகுவன்-(இங்கு நின்றும்) மீள்வேன், என்று இவை பேசலும் -
என்று இவ்வீரவாதங்களை(அருச்சுனன்) சொன்ன வளவில்,-(எ-று.)-இது,
மேல் 61-ஆம் கவியிலுள்ள 'இசைத்தலும்'என்பதனோடுதொடரும்.
வென்போகியவரை 'வீரர்'என்றது, இகழ்ச்சி.               (235)

60.-அசுரர்கள்அருச்சுனனைநோக்கி இகழ்ந்துகூறுதல்.

தழல்வந்தருள்பா வைதடந்துகிலும்
குழலுங்கவர்தந் தடல்கூருமுமக்கு
அழறுன்றியகா னமளித்தவரைக்
கழல்வெஞ்சிலைவீரகடிந்திலையே.

     (இ-ள்.) தழல்வந்தருள் பாவை - அக்கினியிலே அவதரித்தருளிய
சித்திரப்பிரதிமைபோலழகிய (உங்கள் மனைவியாகிய)திரௌபதியினது, தட
துகில்உம் - பெரிய சேலையையும்,குழல்உம் - கூந்தலையும்,கவர்தந்து -
(உங்கள் முன்னிலையில்)பிடித்து இழுத்து அவிழ்த்து, அடல் கூறும்
உமக்கு-வலிமை மிகுந்த உங்களுக்கு, அழல் துன்றிய கானம் அளித்தவரை
- தீ நிரம்பிய காட்டை இடமாகக்கொடுத்த துரியோதனாதியரை,கழல்
வெம்சிலைவீர-வீரக்கழலையும்கொடிய காண்டீவத்தையுமுடைய வீரனே!
கடிந்திலைஏ- (நீ) அழித்தாயில்லையே;(எ-று.)

     'உன்வீரம்என்னவீரம்' என்று இகழ்ந்தார். உனக்கும் உனது
உடன்பிறந்தவர்களுக்கும் மனைவிக்கும்பெரும் பரிபவங்களைச்
செய்தவர்களைஅழிக்க வல்லமையில்லாத உனக்கு வீரவாதம் முழங்க
என்ன வாயுண்டு என்றவாறு: இனி உனக்குத் தீங்கு செய்தவர்களைவிட்டு
உனக்கு நேரில் ஒரு தீங்குஞ்செய்யாத எங்கள்மீது போருக்குஎழுவது
வீரமன்று என்று கருத்துக்கொள்வாருமுளர்.  பாவை - உவமையாகுபெயர்.
'கடந்திலை'என்றும் பாடம்.                                (236)

61.-ஐந்துகவிகள்- அருச்சுனனுக்கும் அசுரர்க்கும்
கடும்போர் விளையஅசுரர்பொருதற்கு அஞ்சினா ரென்று
கூறும்.

என்னாவசுரேசரிசைத்தலுமே
மன்னாகவவீரனும்வார்சிலைநாண்
தன்னாகமுறத்தழுவத்தழல்வாய்
மின்னார்கணைதூவிவெகுண்டனனே.