(இ-ள்.) என்னா- என்று, அசுர ஈசர் - அசுரத்தலைவர்கள், இசைத்தலும் - சொன்னவளவிலே,-மன்ஆகவம் வீரன்உம் - நிலைபெற்ற போரில்வல்ல அருச்சுனனும், வார் சிலைநாண்-நீண்ட வில்லின் நாணி, தன் ஆகம் உற தழுவ-தனது மார்பை நன்றாகப்பொருந்தும்படி, (அதனைமிக்கு இழுத்து), தழல் வாய் மின் ஆர் கணைதூவி - நெருப்புப்போற் கொடிய நுனியையுடைய (ஒளியால்) மின்னல்போன்ற அம்புகளை(அவர்கள்மீது) சொரிந்து, வெகுண்டனன் - கோபித்தான்;(எ-று.) அசுரர்கள்போலவார்த்தையாலன்றிச் செய்கையினால்தனது கோபத்தை வெளிக்காட்டினானென்பார், 'கணைதூவி வெகுண்டனன்' என்றார்:இனி, வெகுண்டு கணைதூவினன் என விகுதி பிரித்துக் கூட்டுவாரு முளர். (237) 62. | பொய்த்தானவர்போ ரரியன்னவன்மேல் மொய்த்தார்முகில்செங் கதிர்மூடுவபோல் வைத்தாரைவடிக் கணைவாண்மழுவேல் உய்த்தார்வரைமே லுருமேறெனவே. |
(இ-ள்.)முகில் - மேகங்கள், செம் கதிர்-சிவந்த கிரணங்களையுடைய சூரியனை,மூடுவ போல் - மறைப்பனபோல, பொய்தானவர்- வஞ்சனையையுடையஅசுரர்கள், போர் அரி அன்னவன மேல் - யுத்தத்திற் சிங்கத்தையொத்த அருச்சுனன்மேலே, மொய்த்தார்-நெருங்கி, வை தாரை வடி கணை-கூர்மையானநுனியையுடைய நெருப்பிற் காய்ச்சியடிக்கப்படுதலையுடையஅம்புகளையும்,வாள்-வாட்களையும்,மழு- மழுக்களையும்,வேல்-வேல்களையும்,வரை மேல் உரும்ஏறு என- மயைின்மேல்விழுகின்ற பேரிடிகளைப்போல,உய்த்தார்-செலுத்தினார்கள்; (எ-று.) பொய்த்தானவர் என்பதற்கு-(இனி விரைவில் அழிதலினாற்) பொய்யாகும் அசுர ரென்றுமாம். முகில் செங்கதிர் மூடுதல், விரைவில் மூட்டம் வாங்குமென்று தெரிவித்தற்கு வந்த உவமை. வை-உரிச்சொல்: ஏறு - ஆண்பெயர்;பெரியதை ஆணென்றல், ஒருமரபு:'ஆணலை'என்பதுங் காண்க. அரியன்னவன் - யானைமுதலிய பெருவிலங்குகளையும் அழிக்கவல்ல மிருகேந்திரனாகியசிங்கம்போலப் பெரும்பகைவர்களையும் அழிக்கவல்ல பெருவீரன்; இனி,பகையொடுக்குவதில் திருமால் போன்றவனென்றுமாம். உருமுற்றெனவே என்று பிரதிபேதம். (238) 63. | என்முன்னவனென் முனெனாவெவரும் முன்முன்வரமுந் தமுருக்கினனால் தன்முன்னொருவீரர்தராதலமேல் வின்முன்னினிலா விறல்வில்விசயன். |
(இ-ள்.) வில்முன்னின் - வில்வித்தையைப்பற்றி ஆலோசிக்குமிடத்து, தராதலம் மேல்-நிலவுலகத்திலே, தன் முன்-தனக்கு |