எதிரில், ஒரு வீரர்நிலா-ஒருவீரரும் நிற்கப்பெறாத,விறல் வில் விசயன்- வெற்றியைத் தருகின்ற வில்லையுடையவிசயனென்னும் ஒரு பெயரையுடைய அருச்சுனன்,-எவர்உம்-அசுரர்கள்பலரும், என்முன் அவன் என்முன் எனா-அவ்வருச்சுனன்எனக்கு முன்னே (போர்செய்க) எனக்குமுன்னே (போர்செய்க) என்று சொல்லிக் கொண்டு, முன் முன் வர-ஒருவர்முன்னே ஒருவர் தன்னைஎதிர்த்து வந்துகொண்டிருக்க,-(அவர்களையெல்லாம்), முந்த-முற்பட முருக்கினன்-கொன்றுகொண்டே வந்தான்;(எ-று.) இலாஎனப்பிரித்து - விற்போர் விஷயத்தில் ஒரு வீரரையும் தன்னினுஞ் சிறந்தவராக உடையவனாகாதஎன்று உரைப்பாருமுளர். (239) 64. | ஒருதேர்கொடுவீ ரனுடன்றவர்தம் கரிதேர்பரியா ளணிகையறமுன் நிருதேசரைவென் றவனேரெனமேல் வருதேரணிதோறு மலைந்திடவே. |
இதுவும், மேற்கவியும்- குளகம். (இ-ள்.)வீரன்-அருச்சுனன், ஒரு தேர் கொடு-(தனது) ஒரு தேரின்மீதிலிருந்து கொண்டே, மேல் வரு தேர் அணிதோறுஉம் உடன்றவர்தம்-மேன்மேல் வருகின்ற தேர்வரிசைகளிலெல்லாமிருந்து போர்செய்த அசுரர்களுடைய, கரி தேர் பரி ஆள் அணி - கஜ ரத துரக பதாதியாகிய சதுரங்க சைனியம்,கையற - அழியும்படி,-முன்நிருத ஈசரை வென்றவன் நேர் என-முன்னே (இராவணாதி)ராக்ஷசத்தலைவர்களைச் சயித்த ஸ்ரீராமபிரான் உவமையென்னும்படி, மலைந்திட-போர்செய்ய,-(எ- று.)-'மலைந்திட'என்பது வருங்கவியில் 'குளித்திடலால்'என்பதனோடு தொடரும். ஒரு தேர் கொடுஎன்றது - பகைவர்கள்தேர் பலவற்றைத்தான் அழித்தும் தன் தேருக்குச் சிறிதும் அவர்களால் அழிவு நேராமற் காத்து என்றபடி. கொடு - கொண்டு: விகாரம். நிருதர்-நைர்ருதர்: வடமொழித்திரிபு: நிருருதி என்னும் திக்பாலகியினது மரபில் தோன்றியவர். (240) 65. | வீரன்சரம்வஞ் சகர்மெய்ம்முழுதும் கூரும்படிசென் றுகுளித்திடலால் ஆரும்பொரவஞ் சினரப்பொழுதில் தேருந்தினரெண் ணிறெயித்தியரே. |
(இ-ள்.)வீரன் சரம்-அருச்சுனனது பாணங்கள், வஞ்சகர் மெய் முழுதுஉம் - வஞ்சனையையுடையஅசுரர்களது உடம்பு முழுவதிலும், கூரும்படி - மிகும்படி, சென்று குளித்திடலால்-போய்த்தைத்து முழுகிவிட்டதனால்,ஆர்உம் பொர அஞ்சினர் - (தானவர்கள்) எவரும் எதிர்த்துப் போர் செய்தற்குப் பயப்பட்டார்கள்;அ பொழுதில்- அந்தச்சமயத்தில், எண் இல் தெயித்தியர் - கணக் |