பக்கம் எண் :

170பாரதம்ஆரணிய பருவம்

     (இ-ள்.)காளம் புயல் என்ன-கரிய (கார்காலத்து) மேகம் போல, நிறம்
கரியார் - கருமைநிறத்தையுடையவர்களாகிய, எவர்உம்-
தைத்தியர்களெல்லோரும், மீள படைகொண்டு-(முன் எடுத்து வந்தவை
போதாமல்) மறுபடியும் பல ஆயுதங்களைஎடுத்துக்கொண்டு, விரைந்து-
துரிதமாக வந்து, வெகுண்டு - கோபித்து, ஆளி திறல் மொய்ம்பனை-
சிங்கத்தைப்போன்ற சாமர்த்தியத்தையும் வலிமையையுமுடைய
அருச்சுனனை,வாளம் கிரி என்ன-சக்கர வாளமலைபோல,வளைந்து-
(இடைவிடாமற்) சூழ்ந்துகொண்டு, அங்கு-அப்பொழுது [அவ்விடத்தில்],
அடலால் - போர்செய்ததனால்,-(எ-று.)-'ஆர்த்தார்'என வருங் கவியோடு
இயையும்.

     என்ன -உவமவுருபு.  மீள - (பகைவன்) பின்னிடையஎன்றுமாம்.
வாளக்கிரி - ஏழுதீவுகளையுஞ்சூழ்ந்த ஏழு சமுத்திரங்களுக்கும் அப்புறத்தில்
பூமிக்குக் கோட்டைமதில்போலச் சுற்றியிருப்பதொரு மலை.           (243)

68.ஆர்த்தாரகல்வா னமுமாழ்கடலும்
தூர்த்தார்சுடர்வெம் படைகொண்டெவரும்
தேர்த்தானவர்வா னுறைதேவருமெய்
வேர்த்தாரினிமேல் விளைவேதெனவே.

     (இ-ள்.) தேர்தானவர் எவர்உம் - (முன்னே போர்செய்ய அஞ்சிய)
தேரின்மீதுள்ள தானவர்களெல்லாரும், ஆர்த்தார் - அஞ்சாது பல
(தைத்தியர்கள் பொருதலைநோக்கி ஆனந்தத்தால்) ஆரவாரித்தார்கள்;
சுடர் வெம்படை கொண்டு - (அருச்சுனன் மீது எறிந்த) ஒளியையுடைய
கொடிய ஆயுதங்களால், அகல் வானம்உம் - பரந்த ஆகாயத்தையும், ஆழ்
கடல்உம் - ஆழ்ந்த கடலையும்,தூர்த்தார் - நிறைத்தார்கள்;(அதுகண்டு),
வான் உறை தேவர்உம் - ஆகாயத்திலிருந்து போர்காண்கின்ற தேவர்களும்,
இனி மேல் விளைவுஏது என-இனிமேல் (அருச்சுனனுக்கு) உண்டாகும்
அபாயம் யாதோவென்று சங்கித்து, மெய்வேர்த்தார்-உடம்பு
வேர்வையடைந்தார்கள்;(எ-று.)

    மெய்வேர்த்தல்-அச்சம்பற்றிய மெய்ப்பாடு. இனியென்பது, எதிர்காலப்
பொருள்குறிப்பதோர் இடைச்சொல்.  விளைவு- உண்டாதல்: உண்டாகுஞ்
செயலுக்குத் தொழிலாகுபெயர்.                                (244)

69.கூற்றொப்பனபல்படைகொண்டவன்மேல்
சீற்றத்தொடெறிந் தனர்தீயவரும்
ஆற்றற்சிலைவீரனுமவ்வவெலாம்
மாற்றிச்சரமா ரிவழங்கினனால்.

     (இ-ள்.)தீயவர்உம் - கொடிய அசுரர்களும், கூற்று ஒப்பன-
(நாசத்தைச் செய்தலால்) யமனைஒப்பனவாகிய, பல் படை-பல ஆயுதங்களை,
கொண்டு - (கைகளில்) எடுத்து, அவன் மேல் - அவ்வருச்சுனன்மீது,
சீற்றத்தொடு - கோபத்துடனே, எறிந்தனர் - வீசினார்கள்; ஆற்றல்
சிலைவீரன்உம்-வலிய வில்லையுடையஅருச்