பக்கம் எண் :

178பாரதம்ஆரணிய பருவம்

83.கன்மழைசொரிந்துவேகக் கனன்மழைவீசியெங்கும்
மின்மழைசிந்திமிக்க வசனியின்மழைகள்வீழ்த்திச்
சென்மழைசிதறியெல்லாத் திசைதொறும்பரந்துகொற்ற
வின்மழைபொழிவான்றன்னைவளைந்ததுவெய்யமாயை.

     (இ - ள்.)வெய்ய மாயை - கொடிய அந்த மாயையானது,- கல் மழை
சொரிந்து - சிலாவருஷத்தைப் பொழிந்துகொண்டும், வேகம் கனல் மழை
வீசி - உக்கிரமான அக்கினிவருஷத்தைப் பெய்துகொண்டும், எங்குஉம் -
எவ்விடத்தும், மின் மழை சிந்தி - மின்னலின் மழையைச்
சொரிந்துகொண்டும், மிக்க அசனியின் மழைகள் வீழ்த்தி - மிகுந்த இடியின்
மழைகளைத்தள்ளிக்கொண்டும், செல் மழை சிதறி - மேகத்தினின்று
பெய்யும் நீர்மழையை வர்ஷித்துக்கொண்டும், எல்லாத் திசைதொறுஉம்
பரந்து - திக்குக்களெல்லாவற்றிலும் பரவி, கொற்றம் வில் மழை பொழிவான்
தன்னை- வெற்றியைத்தருகின்ற வில்லினின்றும் அம்புமழையைச்
சொரிகின்ற அருச்சுனனை,வளைந்த- சூழ்ந்துகொண்டது;(எ-று.)

     எங்கும் என்பதனைப்பிறவற்றுக்குங் கூட்டுக.              (259)

84.கோதிலாவிரதம்பூண்ட குரகதக்குழாமுமுட்கிச்
சூதனுந்தடந்தேரூருந்தொழின்மறந்துயங்கிவீழத்
தாதவிழலங்கலானுமற்றவன்றன்னைத்தேற்றித்
தீதிலாவமோகபாணஞ்சிந்தையாற்றொழுதுவிட்டான்.

     (இ - ள்.)(அம்மோஹாஸ்திரத்தால்), கோது இலா இரதம் பூண்ட -
(தனது) குற்றமில்லாத தேரிற் பூட்டப்பட்டுள்ள, குரகதம் குழாம்உம் -
குதிரைக் கூட்டமும், உட்கி - அஞ்சி, சூதன்உம்-சாரதியாகிய மாதலியும், தட
தேர் ஊரும் தொழில் மறந்து - பெரிய இரதத்தைச் செலுத்துகின்ற
செய்கையை மறந்து, உயங்கி வீழ - மயங்கி (த் தேரின் முன்னிடத்தே)
விழ,-தாது அவிழ் அலங்கலான்உம் - பூந்தாதுகள் சொரியப்பெற்ற
மாலையையுடையஅருச்சுனனும், அவன் தன்னைதேற்றி - அப் பாகனை
மயக்கந் தெளியச் செய்து, தீது இலா - குற்றமில்லாத, அமோக பாணம் -
(மாயையை நீக்கவல்ல) அமோஹாஸ்திரத்தை, சிந்தையால் தொழுது -
மனத்தால் வணங்கி [அதற்குரியதேவதையைத் தியானித்து],விட்டான் -
(மோஹாஸ்திரத்திற்கு எதிராக) விடுத்தான்;(எ - று.)

    கீழ்ப்பத்தொன்பதாங்கவியில் "ஆயிரம்பத்து வெம்போரடற் பரி
பூண்டதேர்"என்றாராதலால்,இங்கே குரகதக்குழாம்என்றார். 'குலாம்'
என்னும் பாடத்துக்கு, குலம் என்பதன் விகார மென்க.
அமோகபாணத்துக்குத் தீதாவது - மாயையை முழுவதும் போக்கமாட்டாமை;
அக்குற்றமில்லாத தென்க. யோக பாணம் என்றும் பாடம்.   (260)

85.மாயவல்லிருளையெல்லாம்வான்கதிர்ச்செல்வனென்னச்
சேயவப்பகுவாய்வாளிதிசைதொறுங்கடிந்தவெல்லை