| ஆயவம்முறைமைதப்பா வறம்பொருளின்பமுற்றும் தூயவரிதயமென்னத் தொலைந்ததுசூழ்ந்தமாயை. |
(இ - ள்.)சேய - (பகைவரிரத்தந் தோய்தலாற்) சிவந்துள்ள, பகுவாய்- பிளப்புள்ள வாயையுடைய, அ வாளி - அந்த அமோஹாஸ்திரம்,-வான் கதிர் செல்வன் என்ன - ஆகாயத்திலே விளங்குகின்ற கிரணங்களையே செல்வமாகவுடைய சூரியன்போல, மாயம்வல் இருளைஎல்லாம் - (மோஹாஸ்திரத்தின்) மாயையாலாகிய வலிய [அழித்தற்குஅரிய] அந்தகாரம் முழுவதையும், திசை தொறுஉம்-எல்லாத் திக்குக்களிலும், கடிந்த எல்லை- நாசஞ் செய்தவளவில்,- ஆய அ முறைமை தப்பா - (நூல்களிற் கூறியது) ஆகிய அந்த நல்லொழுக்க நெறி தவறாமல்,அறம் பொருள் இன்பம் முற்றும் - தருமம் அர்த்தம் காமம் என்னம் மூன்று புருஷார்த்தங்களையும்குறைவற நுகர்ந்து (வீடுபேற்றின் பொருட்டுத்) துறந்த, தூயவர் - பரிசுத்தகுணமுடையவர்களது, இதயம் என்ன - மனத்திலே (மாயை ஒழிதல்) போல, சூழ்ந்த மாயை தொலைந்தது- (அருச்சுனனை) வளைந்துகொண்டமாயை (அவ்விடத்தே) ஒழிந்தது;(எ - று.) சேய -குறிப்புப்பெயரெச்சம்;செம்மை - பகுதி:சேய்மை என்னும் பண்பின் அடியாப்பிறந்த தெனக் கொண்டு, தூரத்திலுள்ளவெனப் பொருளுரைத்து, அமோஹாஸ்திரம் தூரத்திலிருந்துகொண்டே சூரியன் இருளைப்போக்குவதுபோலமாயையை ஒழித்ததுஎனக் கருத்துக்கொள்ளலும் ஒன்று. வல்லிருள் என்பது - சூரியன் சந்திரன் அக்கினி என்னும் முச்சுடர்களுக்கும் அழியாத இருள் என்றபடி. இல்லறநெறியால் அறிவுமுதிர்ந்துழியல்லது துறக்கப்படாமையின், 'ஆயவம்முறைமைதப்பா வறம்பொருளின் பமுற்றுந் தூயவர்'என்றார்,துறந்தாரை;இதுபற்றியன்றே 'துறவறமாவது- மேற்கூறிய இல்லறத்தின் வழுவாதொழுகி அறிவுடையராப் பிறப்பினையஞ்சி வீடுபேற்றின்பொருட்டுத் துறந்தார்க்கு உரித்தாய அறம்' என்றார்,பரிமேலழகரும். தூயவர் - மனமாசு நீக்கியவர்;மெய்யுணர்வு பெற்றவர். அவர்கள் மனத்தில் ஒழியும் மாயையாவது - விபரீதஞானம். அறமாவது - மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலும். பொருளாவது - அறவழியாற் சேர்க்கப்பட்ட மணி பொன் முதலியன. இன்பமாவது-ஒருகாலத்து ஒரு பொருளால் ஐம்புலன்களும் அநுபவித்தற் சிறப்புடையதான காமவின்பம். (261) 86. | வஞ்சவாளவுணர்வெம்போர் மறந்துமெய்ம்மயங்கிமீண்டும் நெஞ்சினிலறிவுதூண்டநிரைநிரைதடந்தேர்தூண்டிச் செஞ்சரஞ்சூலம்விட்டே றெழுமழுத்திகிரிவாளம் அஞ்சனக்குன்றன்னான்மேலெறிந்துடனார்த்தகாலை. |
இதுவும் மேலைக்கவியும்- குளகம். (இ - ள்.) வஞ்சம் - வஞ்சனையையும்,வாள் - ஆயுதங்களையுமுடைய, அவுணர் - அசுரர்கள், வெம் போர் மறந்து - கொடிய போர்த்தொழிலை மறந்து, மெய் மயங்கி - உடம்பு மயங்கியிருந்து, |