என்னும் மலையினின்றும் உற்பத்தியாயினதென்றும்,, கவோனென்னும் அரசனது மகளென்றும் பொருள். தப்பாமலிருத்தற்குக் காவேரியை யுவமை கூறியது, ஆடிப்பதினெட்டாம்பெருக்கு என்று வழங்குமாறு குறித்தநாளிற் பெருக்குத் தவறாமல் வருதலா லாகும். (24) 25. | தோத்திரமான தெய்வச்சுதிகள்யாவுநான்காக் கோத்தவன்பின்னுஞ்சொல்வான்குன்றவில்லவன்பாலின்று பார்த்தனேசென்றுபாசுபதக்கணைவாங்கினல்லா லார்த்தபைங்கழலாயெய்தாதரும்பகைமுடித்தலென்றான். |
(இ-ள்.) தோத்திரம் ஆன - (கடவுளுடைய) ஸ்தோத்ரரூபமான, தெய்வம் சுருதிக்ள யாஉம்-தெய்வத்தன்மையையுடைய வேதங்களெல்லாவற்றையும், நான்கு ஆகோத்தவன் - (இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்னும்) நான்றாக முறைப்படவகுத்தவனாகிய வியாசபகவான், பின்உம் சொல்வான் - மீண்டுஞ் சொல்லுபவனாய், 'ஆர்த்த பைஞ் கழலாய்- (காலிற்) கட்டிய பசுமையான வீரக்கழலுடையவனே! இன்று-இப்பொழுது, பார்த்தனே - அர்ச்சுனன்தானே, குன்றம் வில்லவன்பால் - மேருமலையை வில்லாகக் கொண்ட சிவபெருமானிடத்தில், சென்று-போய், பாசுபதம் கணை - பாசுபதஅஸ்திரத்தை, வாங்கின் அல்லால் - வாங்கினாலல்லாமல், அரு பகை முடித்தல் - (அழிப்பதற்கு) அருமையான பகைவர்களை அழித்தல், எய்தாது - கூடாது,' என்றான் என்று அருளிச் செய்தான்; (எ-று.) தோத்திரமான சுருதி-(யாவரும் புகழ்ந்து) துதிக்கும்படியான வேத மெனவுமாம். வேதத்திற்குத் தெய்வத்தன்மை - எல்லா நற்பொருள்களையும் உபதேசித்து எல்லா நற்பலன்களையும் அளித்தல். சுருதி = ஸ்ருதி : எழுதாக்கிளவியாய்க் குருசிஷ்ய பரம்பரையாகக் கேள்வியின் மூலமாகவே வருவது என வேதத்துக்கக் காரணக்குறி. திரிபுர சங்காரகலத்தில் மேருமலை சிவபிரானுக்கு வில்லாக அமைந்ததென்க. பார்த்தன்=பிருதையின்மகன்: (பிருதை - குந்தி): வடமொழித் தத்திதாந்தநாமம். இளையமகனிடத்தில் தாய்க்கு அன்பு அதிக மென்ற காரணத்தால், இப்பெயர் அவனுக்கு அமைந்தது. பாசுபதம் - பசுபதியை (சிவபெருமானைத்) தெய்வமாகக் கொண்டஅஸ்திரம் : இதுவும் தத்திதாந்தமே. (25) 26.-இதுவும்,மேற்கவியும் - ஒரு தொடர் : ழனிவன்சொல்லைச் சிரசாவகித்துத்தருமபுத்திரன் அருச்சுனனைத் தவஞ்செய்தாயினும் சிவனருள்பெறுக என்றல். பரிவுடன்முனிவன்மாற்றம்பணிந்துதன்றலைமேற்கொண்டு வரிசிலைக்குலகமெண்ணுமகபதிமகனைநோக்கிக் |
|