பக்கம் எண் :

நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கம்181

88.ஆய்ந்தநூலறிஞர்க்கீந்த வரும்பொருளென்னமேன்மேல்
வேந்தர்கோன்பகழியொன்றுகோடியாய்விளைந்ததெங்கும்
மாந்தர்கைக்கொடாதபுல்லர் வனப்பிலாச்செல்வம்போலத்
தேய்ந்ததுவஞ்சநெஞ்சத் திறலுடைத்தனுசர்சேனை.

     (இ - ள்.)வேந்தர் கோன் பகழி - அரசர்களுக்குட் சிறந்தோனாகிய
அருச்சுனனது அம்பு,-நூல் ஆய்ந்த அறிஞர்க்கு ஈந்த-சாஸ்திரங்களை
ஆராய்ந்த அறிவையுடைய பெரியோர்களுக்குத் தானஞ்செய்த, அரு
பொருள் என்ன - (பெறுதற்கு) அரிய செல்வம்போல, ஒன்று கோடி ஆய் -
ஒன்றுதானே மிகப் பலவாய், எங்குஉம் - அப்போர்க்களம் முழுவதிலும்,
மேல்மேல் விளைந்தது- மேலேமேலே பெருகிற்று;வஞ்சம் நெஞ்சம் -
வஞ்சனையையுடையமனத்தையும், திறல் உடை - வலிமையையுமுடைய,
தனுசர்சேனை-அசுரர்களுடையசேனையானது,மாந்தர் கை கொடாத -
எந்த மனிதருடைய கையிலுந் தானஞ்செய்யாத, புல்லர் - கீழ்மக்களுடைய,
வனப்பு இலா செல்வம்போல - அழகில்லாத பொருள் போல, தேய்ந்தது -
குறைந்தது;(எ-று.)

     அறிவுஒழுக்கங்களினாற்சிறந்த ஸத்பாத்திரங்களில் தானஞ்
செய்யப்பட்ட பொருளின் பயன் மிகவும் பெரியதா மென்பதை
"இனைத்துணைத்தென்பதொன்றில்லைவிருந்தின், றுணைத்துணைவேள்விப்
பயன்","அறப்பயனுந்,தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால்,
வான்சிறிதாப் போர்த்து விடும்,""பார்த்தெதிர்,வியந்தவர் வெருக்கொள
விசும்பினோங்கினா, னுயர்ந்தவர்க்குதவிய வுதவி யொப்பவே"
என்பவற்றால்அறிக.  அங்ஙனந் தானஞ்செய்யாத லோபியினது செல்வம்
அழிந்துவிடுமென்பது "கொடுப்பதூஉந்துய்ப்பதூஉ மில்லார்க் கடுக்கிய,
கோடியுண்டாயினுமில்","கிளைஞர்க்குதவாதான் செல்வமும், ***உள்ளன
போலக் கெடும்"என்பனகொண்டு அறியப்படும்;இதுபற்றியே, கீழ்
இராயசூயச் சருக்கத்தில் "இடாதவன்றனமெனக்கரந்தனர்களேனை
மன்னவர்கள்யாருமே"என்றதும்.  மாந்தர் -ஒருமையில்லாமல்
எப்பொழுதும் பன்மையிலேயே வரும் பெயர்;இதுதொல்காப்பியனார்
கொள்கை.  ஒருமையிலும் வரு மென்கின்றனர்,இக்காலத்து ஒரு
சாரார்.                                                (264)

89.-இதுவும்,மேற்கவியும் - குளகம்:இறந்தவர்போக
எஞ்சினவர்போர்க்குவர, அவர்களைஅருச்சுனன்
கண்டதுண்டமாக்குதல்.

படாதொழியவுணர்மீண்டும் பரிபவப்படுத்தாயெம்மை
அடாவினியுன்னையின்னேயாருயிர்குடித்துமென்னாக்
கடாமலைவயவன்மீதுகடும்படைபலவும்விட்டார்
தொடாநெடும்பகழிதன்னாற்சூரனுந்துணித்துவீழ்த்தி.

     (இ - ள்.) படாது ஒழி அவுணர் - (கீழ் இறந்தவர்கள் போக)
இறவாமல் தப்பிய அசுரர்கள், (அருச்சுனனைநோக்கி), 'எம்மை