பக்கம் எண் :

182பாரதம்ஆரணிய பருவம்

மீண்டுஉம்பரிபவப்படுத்தாய் - எங்களைமறுபடியும் அவமானப்படுத்தினாய்;
அடா-! இனி-., உன்னை-,இன்னே - இப்பொழுதே, ஆர் உயிர் குடித்தும் -
அருமையான உயிரைப் பருகுவோம்,'என்னா - என்று சொல்லிக்கொண்டு, -
கடாம் மலைவயவன்மீது - மதசலத்தையுடைய மலைபோன்றவலிமையையுடைய
அருச்சுனன்மேலே, கடு படை பலஉம் விட்டார் - கொடுமையான ஆயுதங்கள்
பலவற்றையும் எறிந்தார்கள்; சூரன்உம் - அருச்சுனனும், நெடு பகழி தொடா -
நீண்ட பாணங்களைத் தொடுத்து, தன்னால்- அதனால்,துணிந்து வீழ்த்தி -
(அவர்கள் எறிந்த ஆயுதங்களைப்)பிளந்து தள்ளி,-(எ - று.)-
'கண்டங்கண்டான்'(90) என முடியும்.

     கீழ் 74-ஆங்கவியில் ஒருகாற் பரிபவப்படுத்தியது கூறியதனால்,
இங்கே 'மீண்டும்பரிபவப்படுத்தாய்'என்றார். இனி, மீண்டும் விட்டார்
என்றும் இயைக்கலாம்.  அடா - முன்னிலையிடைச்சொல்:இகழ்ச்சிதோன்ற
நின்றது.  ஆருயிர் குடித்த லென்பது - ஒருசொல் தன்மைப்பட்டு,
கொல்லுதலென்னும் பொருளதாய், உன்னைஎன்னுஞ் செயப்படுபொருளுக்கு
முடிக்குஞ் சொல்லாயிற்று.  யானையை'மலை'என்றது - பெருமையும்,
வலிமையும், நீர்ப்பெருக்கமும் பற்றி.  யானை- வீரனுக்கு, நடை வலிமை
காம்பீரியங்களால் உவமை.  வயவன் - வய என்ற உரிச்சொல் பகுதி.  இனி,
வயம் பகுதியெனக் கொண்டு, ஜயத்தையுடையவனென்றாகவுமாம். தொடா -
இறந்தகால வினையெச்சம்:இனி, எதிர்மறைப் பெயரெச்சமாகக் கொண்டு
இதுவரையில் ஒருகாலத்தும் எடுத்துத் தொடுக்காத அம்புகளால் எனவுமாம்.
                                                        (265)

89.உரங்களுந்தோளுங்கண்ணு முதரமுமதரத்தோடு
சிரங்களுந்தாளுநாளுஞ்செய்தவமுயன்றுபெற்ற
வரங்களுமறையுமேன்மேல் வான்படைக்கலங்கள்வீசும்
கரங்களுஞ்சரங்கள்கொண்டுகணத்திடைக்கண்டங்கண்டான்.

     (இ-ள்.) (அருச்சுனன் அசுரர்களுடைய), உரங்கள்உம் -
மார்புகளையும்,தோள்உம் - தோள்களையும்,கண்உம்-கண்களையும்,
உதரம்உம் - வயிறுகளையும்,அதரத்தோடு - வாய்களையும்,சிரங்கள்உம் -
தலைகளையும்,தாள்உம்-கால்களையும்,நாள்உம் - ஆயுள் நாளையும்,
செய் தவம் முயன்றுபெற்ற வரங்கள்உம் - செய்தற்கு உரிய தவத்தைச்
செய்து பெற்ற வரங்களையும்,மறைஉம்-மந்திரங்களையும்,மேல் மேல்
வான் படைக்கலங்கள் வீசும் கரங்கள்உம்-(இடைவிடாமல்)
ஒன்றன்மேலொன்றாகச்சிறந்த ஆயுதங்களைஎறிகின்ற கைகளையும்,
சரங்கள் கொண்டு - (தனது) அம்புகளினால்,கணத்திடை -
நொடிப்பொழுதிலே, கண்டம் கண்டான் - பல துண்டுகளாகச் செய்தான்;
(எ- று.)

     'செய்தவமுயன்றுபெற்ற'என்னும் அடைமொழியை மறைக்கும்
கூட்டுக.  படைக்கலம் - சேனைக்கருவியெனக்காரணப்பெயர்: