பக்கம் எண் :

184பாரதம்ஆரணிய பருவம்

வலிமையையுடையஆயுதங்களும், மிக்க வரம்உம் - மிகுந்த வரங்களும்,
மெய் வலிஉம் - தேகபலமும், உண்டு - உள்ளன, என்று - என்றுகூறி,
பின்னும் - மீண்டும், இன்னவை - இவ்வார்த்தைகளை,உரைத்தது -
சொல்லிற்று;(எ-று.)-அவைமேற்கவியிற்கூறுகின்றார்.

     மறல் - கொலைத்தொழில்;அஃது உடையவன், மறலி: இ - பெயர்
விகுதி, பெற்ற என்பதை, வரம் மெய்வலி இவற்றுக்குங்  கூட்டுக.  அசரீரி -
சரீரம் அற்றது.  அம்மா - இடைச்சொல்: ஈற்றசை:
வியப்புப்பொருளதாகவுமாம்.  ஆல் - தோற்றம்.                 (268)

93.வெய்யவெம்படைகட்கெல்லாம் விளிகிலர்மெய்ந்நூறாகக்
கொய்யினுமுருவமீண்டுங் கூடுவர்குறிப்பினின்று
கையினாவுடன்வாய்சென்றுகலந்திடுங்கணத்தினம்பால்
எய்திடுகென்றுவீரற் குறுதியுமிசைத்ததன்றே.

     (இ-ள்.)(இவ்வசுரர்கள்),-வெய்யவெம் படைகட்கு எல்லாம் - மிகவுங்
கொடிய ஆயுதங்களனைத்துக்கும்,விளிகிலர்-இறக்கமாட்டார்கள்;மெய் நூறு
ஆக கொய்யின்உம் - உடம்பை நூறு துண்டாக அறுத்தாலும், உருவம்
மீண்டுஉம் கூடுவர் - வடிவம் முன்போலவே மறுபடியும்
பொருந்தப்பெறுவர்:(இவர்களை),இனாவுடன்- பரிகாச வார்த்தையுடனே,
கை வாய் சென்று கலந்திடும் கணத்தின் - கையானது வாயைச்சென்று
கூடுகின்ற சமயத்தில், குறிப்பில் நின்று - கவனத்தோடு இருந்து, அம்பால்
எய்திடுக - அம்புகளினால்எய்வாயாக, [அப்பொழுதுஅம்பெய்தால்
அழிந்துவிடுவர்],என்று-,வீரற்கு - அருச்சுனனுக்கு, உறுதிஉம்-
(பகைவரைக் கொல்லுதற்கு) நல்ல உபாயத்தையும், இசைத்தது - (அசரீரி)
சொல்லிற்று;(எ-று.)-அன்றே- ஈற்றசை.

     வெய்ய வெம் -ஒருபொருட்பன்மொழி.  விளிதல் இறத்தலாதலை,
"உலகின்,விளிநோக்கி யின்புறூஉங் கூற்று"என்ற விடத்துங் காண்க.
உருவம் - ரூபம்.  இனா- நகைச்சொல்.  கையில் நாவுடன் வாய்சென்று
என்றுபிரித்து, நாவுடன் வாயிற் கை சென்று கலந்திடுங் காலத்து எனினுமாம்.   
                                                       (269)

94.-அருச்சுனன்தேரைத் திரியவோட்டிப் போர்க்குச்
சித்தனாக,அவுணர் வீரன்புறங்கொடுத்தானென்று
கருதுதல்.

வானிடத்தரூபிசொன்ன வாசகமனத்திற்கொள்ளாத்
தேனுடைத்தெரியல்வீரன் றேரினைத்திரியவோட்டிக்
கானிடைக்கடவுள்வேடன் றருங்கணைகரத்திற்கொண்டு
தானுடைத்தனுவிற்பூட்டி யனுப்படச்சமைந்ததோரார்.

             இதுவும், மேற்கவியும் - குளகம்.

     (இ-ள்)வானிடத்து - ஆகாயத்தினிடத்திலே, அரூபி - அசரீரியாகிய
ஆகாயவாணி, சொன்ன-,வாசகம்-வார்த்தையை