சமுகம்-ஸமூஹம்;வேனில் - இங்கே, சித்திரை மாதமும் வைகாசிமாதமுமாகிய இளவேனிற்பருவம். மன்மதனுக்கு வேனிற்காலத்திலே போர்த்தொழிற்கண்ணே ஊக்கமுங் களிப்பும் உண்டாதல்பற்றி, அப்பொழுது அவனுடம்பு பூரித்து அழகுசிறந்து விளங்குமாதலால். 'வேனில்வேள்' என்றார். வேள் - யாவராலும் விரும்பப்படுங் கட்டழகுடையவன்;அல்லது ஆடவர்க்கும்மகளிர்க்கும் ஒருத்தருக்கொருத்தர் விருப்பத்தை விளைப்பவன். 'வேனில்வேள்'என்றது, குமரவேளைவிலக்கிநின்றது. ஆவலங்கொட்டி யார்த்தலாவது - தோற்றவர்க்கு அவமானந் தோன்ற வென்றவர் வாயினால் ஒருவகைச் சத்தத்தையெழுப்பி ஆரவாரித்து ஆடுதல். செருக்குத்தோன்ற ஒலிசெய்தலுமாம். ஆவலம்-'சீழ்க்கை','வீளை'என்பன போல்வதொரு கொக்கரிப்பு என உணர்க. கனலிற்பொங்கி என்று பிரதிபேதம். (271) 96.-அருச்சுனனெய்தபாசுபதாஸ்திரத்தால் அவுணரங்கம்பொடியாதல். உரம்பட்டவஞ்சர்சேனையொருப்பட்டவுறுதிநோக்கித் திரம்பட்டசிலைக்கைவீரன்சிலீமுகந்தெறித்தபோதச் சரம்பட்டதனுசரங்கஞ் சங்கரன்செங்கையம்பால் புரம்பட்டபரிசுபட்டுப் பொடிந்தனபொடியாய்மன்னோ. |
(இ-ள்.) உரம்பட்ட - வலிமைமிகுந்த, வஞ்சர் - வஞ்சகராகிய அசுரர்களது, சேனை-,ஒருப்பட்ட - (தான் கருதியபடியே அவமதிப்பொலியோடு கையை வாயிலேவைத்து) ஒருமைப்பட்ட, உறுதி - நன்மையை, நோக்கி - பார்த்து,-திரம்பட்ட சிலைகை வீரன் - உறுதிபொருந்திய வில்லையுடையகையையுடைய அருச்சுனன்,-சிலீமுகம் தெறித்தபோது - அம்பை எய்தமாத்திரத்தில்,- அ சரம் பட்ட தனுசர் அங்கம் - அந்த அம்பு படப்பெற்ற அசுரர்களது உடம்புகள், சங்கரன் செம் கை அம்பால் புரம் பட்ட பரிசு பட்டு - சிவபிரானது சிவந்த கையினாலெய்யப்பட்ட(திருமாலாகிய) அம்பினால்திரிபுரம் அடைந்த தன்மையை யடைந்து, பொடி ஆய் பொடிந்தன - நீறாயொழிந்தன;(எ-று.)- மன், ஓ -ஈற்றசைகள். ஒருப்படுதல் -ஒருங்கே தன்மனப்படியாதல். திரம்-ஸ்த்திரம். சிலீமுகம் - ஸிலீமுகம்:கூர்மையை முனையிலேயுடையதென்று பொருள். இங்கே, பாசுபதம். பொடிதல்-தூளாதல். (272) 97.-அருச்சுனனெய்தபாசுபதாஸ்திரத்தின் செய்கை. உருத்ததுமிகவுமண்ட முடைந்திடவுடன்றுபொங்கிச் சிரித்ததுதனுசர்மெய்யுஞ் சிந்தையுஞ்சேரப்பற்றி எரித்ததுதூநீராடி யிவனிடந்தன்னில்வந்து தரித்ததுமீண்டுமந்தச் சங்கரன்செங்கைவாளி. |
(இ-ள்.)சங்கரன் செம் கை - சிவபிரானது சிவந்தகையாற் கொடுக்கப்பட்ட, அந்த வாளி - அந்தப் பாசுபதாஸ்திரமானது,- |