மிகவும் உருத்தது -மிகவுங் கோபித்துச் சென்று, உடன்று-பகைத்து, பொங்கி - கொதித்து, அண்டம் உடைந்திட-(அதிர்ச்சியால்) அண்டகோளம் உடையும்படி, சிரித்தது - நகைத்து, தனுசர் - அசுரர்களது, மெய்உம்- உடலையும்,சிந்தைஉம்-மனத்தையும், சேர பற்றி எரித்தது - ஒருசேரப் பற்றி யெரியச்செய்து, தூ நீர் ஆடி - பரிசுத்தமாகிய நீரிலே முழ்கி, இவனிடந்தன்னில் - அருச்சுனனிடத்திலே, மீண்டும் வந்து தரித்தது - திரும்பவும் வந்து தங்கிற்று;(எ-று.) உருத்தது,சிரித்தது, எரித்தது - முற்றெச்சங்கள். (273) வேறு. 98.-அசுரரெல்லாம்இறந்து வீரசுவர்க்கஞ் சேர்ந்தமை. துவசத்தொடுதேர் களம்வீழச்சு டர்நி வாத கவசத்தொடுமெய் கடல்வீழக் கடுகி யற்றைத் திவசத்திவறாவரமங்கையர் வீழச் சென்றார் அசவத்துடனந் தகனூரி லசுர ரெல்லாம். |
(இ-ள்.)அசுரர் எல்லாம் - அசுர்கள் யாவரும்,-துவசத்தொடுதேர் களம் வீழ - கொடிகளுடனே (தமது) தேர்கள் போர்க்களத்தில் விழவும், சுடர் நிவாத கவசத்தொடு மெய் கடல் வீழ-விளங்குகின்ற காற்றும் உட்புகவொண்ணாதகவசத்துடனே (தமது) உடம்புகள் கடலிலே விழவும், அரமங்கையர் இவறாவீழ- தெய்வப்பெண்கள் பெருவிருப்பங்கொண்டு (தம்மேல்) வந்து விழவும், அவசத்துடன்-(தம்) வசத்திலில்லாமல், அற்றை திவசத்து - அன்றைத்தினத்தில், கடுகி - விரைந்து, அந்தகன் ஊரில் - யமலோகத்தில், சென்றார்- போனார்கள்;(எ-று.) யுத்தத்திற்புறங்கொடாமற் போர்செய்து இறந்தவர்கள் உடனே தெய்வப்பெண்கள் கையைப்பற்றிக் கொண்டு வீர சுவர்க்கத்திற் செல்கின்றனர் என்பது நூல்மரபாதலின், 'இவறாவரமங்கையர்வீழ' என்றார்;அங்ஙனஞ் செல்லுங்காலத்து யமபுரத்தின் வழியாகவே செல்லவேண்டுதலால், 'அந்தகனூரிற்சென்றார்'எனப்பட்டது. அவசத்துடன் என்றது-விதிவசப்பட்டு: அல்லது அருச்சுனனெய்த அம்பின் வசப்பட்டு: அன்றிக்கே, தேவதா ஸ்திரீகளது பாணிக்கிரகணத்தாலாகிய ஆனந்தத்தினால்மனம் பரவசப்பட்டு என்றவாறாம். அன்று+திவசம்=அற்றைத் திவசம். [நன்- உயிர் -34,35]திவஸம் - வடசொல். இவறா,இவறு - பகுதி;இவறல் - ஆசைப்பெருக்கம். இதுமுதற் பதினாறுகவிகள்- பெரும்பாலும் மூன்றாஞ்சீரொன்று புளிமாங்கனிச்சீரும், மற்றை நான்கும் மாச்சீர்களுமாகிய நெடிலடி நான்குகொண்டு வந்த கலிநிலைத்துறைகள். (274) |