99.-அருச்சுனனைப்பற்றியதேவர்களின் கொண்டாட்டம் ஆர்த்தாரணிகூரலர்மாமழை யால்விசும்பைத் தூர்த்தார்துதித்தார்மதித்தார்நனி துள்ளுகின்றார் போர்த்தானவர்தஞ்செருக்காற்படு புன்மையெல்லாம் தீர்த்தானிவனென்றகல்வானுறை தேவரெல்லாம். |
(இ-ள்.) அகல்வான் உறை தேவர் எல்லாம் - பரந்த மேலுலகத்தில் வசிக்கின்ற தேவர்கள் யாவரும்,-'இவன்- இவ்வருச்சுனன், போர் தானவர்தம் செருக்கால் படு புன்மை எல்லாம்-யுத்தத்தில்வல்ல அசுரர்களது கர்வத்தால் (நாம் இதுவரையிலும்) அனுபவித்துவந்த துன்பங்களனைத்தையும்,தீர்த்தான் - நீக்கினான்,'என்று - என்று எண்ணியுஞ் சொல்லியும், ஆர்த்தார்-ஆரவாரஞ்செய்து, அணி கூர் அலர் மா மழையால்-அழகுமிக்க சிறந்த கற்பகப்பூமாரியால், விசும்பை தூர்த்தார்- ஆகாயத்தை நிறைத்து, துதித்தார் - (அருச்சுனனைப்)புகழ்ந்து, மதித்தார்- கௌரவித்து, நனி துள்ளுகின்றார்- (ஆனந்தத்தால்) மிகவுங் குதிக்கின்றவரானார்;(எ-று.)-வெகுநேரம்ஆனந்தக் கூத்தாடியமை தோன்ற 'துள்ளுகின்றார்'என்றார். (275) 100.-இரத்தப்பெருக்கின் வருணனை. கூரும்படையுங்குடையுங்கொடி யுங்கொழித்துத் தேருங்கரியும்பரியுந்திசை தோறுமுந்தி ஊருங்குருதிக்கடல்பொங்கி யுவர்க்கடன்மேற் போரும்பொரப்போயணியோடு புகுவபோலும். |
(இ-ள்.) ஊரும்- (கடலைநோக்கிச்) செல்லுகின்ற, குருதி கடல்- இரத்தசமுத்திரமானது,-கூரும்- மிகுந்த, படைஉம்-ஆயுதங்களையும், குடைஉம் - குடைகளையும்,கொடிஉம் - துவசங்களையும்,கொழித்து - முன்னே செலுத்தி வருதலினாலும்,-தேர்உம்- தேர்களையும்,கரிஉம் - யானைகளையும்,பரிஉம் - குதிரைகளையும்,திசைதோறும்உம் - எல்லாத் திக்குகளிலும், உந்தி - அலைத்துத்தள்ளுதலினாலும்,-உவர்கடல் மேல் - உப்புக் கடலின்மீது, பொங்கி - (தனக்கு ஒப்பாகமாட்டாதென்று) சீறியெழுந்து, போர் உம் பொர - யுத்தத்தையுஞ் செய்யும்பொருட்டு, அணியோடு போய் புகுவ-சைனியத்துடனே மேற்சென்று சேர்வதை, போலும்-ஒக்கும்;(எ-று.) அருச்சுனனால்வெட்டி வீழ்த்தப்பட்ட அசுரரின் உடலிலிருந்து பெருகும் குருதியின் கடல், படை குடை கொடிகளைக்கொழித்தலாலும் தேர் முதலியவற்றைத் திசைதோறும் உந்துவதாலும் உவரிக்கடல்மீது பொரச் செல்வது போலுமென்றவாறு. தற்குறிப்பேற்றவணி. திரைதோறும் என்றும் பாடம். (276) 101.-போர்களத்துஅருச்சுனன் வெற்றியோடு நிற்றல். தத்திக்குருதிக்கடல்பொங்கத் தனித்தனிநின்று எத்திக்கினும்வெம்பிணக்குன்ற மெழிலொடோங்கப் |
|