பத்திப்படமேற்பருந்தின்குலம் பந்தர்செய்யக் கொத்துற்றதண்டார்த்திறற்கோதண்ட வீரனின்றான். |
(இ-ள்.) குருதிகடல் - இரத்தவெள்ளம், தத்தி பொங்க - பாய்ந்து பெருகவும்,-எதிக்கின்உம் - எல்லாத் திசைகளிலும், வெம் பிணம் குன்றம் - மலைபோன்றகொடிய பிணக்குவைகள், தனி தனி நின்று - வெவ்வேறாக நின்று, எழிலொடு ஓங்க-எழுச்சியோடு உயர்ந்து தோன்றவும்,-பருந்தின் குலம்-பருந்துகளின் கூட்டம், மேல் - ஆகாயத்திலே, பத்தி பட - வரிசை வரிசையாக, பந்தர் செய்ய - (நிழலின் பொருட்டுப்) பந்தல் போகட்டாற்போல இடைவிடாது பரவவும்,-கொத்துஉற்ற தண் தார் திறல் கோதண்டம் வீரன் - பூங்கொத்து நிறைந்த (தேனினாற்)குளிர்ந்த மாலையையணிந்தவலிமையையுடைய வில்லையுடையஅருச்சுனன், நின்றான்- (போர்க்களத்திலே) நின்றான்;(எ-று.) கோதண்டமென்னும் இராமனது வில்லின் பெயரால் அருச்சுனனது காண்டீவத்தைக் கூறினார்,'துஷ்டநிக்கிரகசிஷ்டபரிபாலனத்தில் இவன் இராமன் போல்வான்'என்னுஞ்சிறப்புத் தோன்றுதற்கு. பக்தி - பங்க்தி. (277) 102.-அசுரமங்கையரின் அரற்றொலி. மின்போனுடங்கவிடைவேல்விழி நீர்ததும்பப் பொன்போலுருவங்கருகும்படி பூழிபோர்ப்ப அன்போடவுணர்மடமாத ரரற்றுமோதை என்போலுமென்னினிடிபோல்வந் திசைத்ததெங்கும். |
(இ - ள்.) அவுணர் மடம் மாதர் - (இறந்துபோன) அசுரர்களின் மனைவிமார்களாகியஇளையமகளிர், இடை - (தங்களது) இடுப்பு, மின்போல் நுடங்க - கொடிமின்னல்போலத் துவளவும்,- வேல் விழி - வேலாயுதம் போன்ற கண்கள், நீர் ததும்ப-கண்ணீர் நிறையவும், பொன்போல் உருவம் கருகும்படி - பொன்னையொத்தநிறமமைந்த மேனி கறுக்கும்படி, பூழி போர்ப்ப - புழுதி மூடவும், (வந்து விழுந்து புரண்டு), அன்போடு - (கணவர்பாலுள்ள) அன்புடனே, அரற்றும் - கதறியழுகின்ற, ஓதை-ஓசை,-என் போலும் என்னின் - எதனையொக்குமென்றால், இடிபோல் - இடியோசையைப்போல, எங்கும் வந்து இசைத்தது - எவ்விடத்துஞ் சென்று ஒலித்தது;(எ-று.) இடைக்கு மின்உவமை - ஒளியும் மெல்லிதாயிருத்தலும் பற்றியும், விழிக்கு வேலுவமை - கூர்மையுங் காமநோயையுண்டாக்கி ஆடவரை வருத்தலும் பற்றியும், உருவத்துக்குப் பொன் உவமை - நிறமும் அருமையும் பற்றியும் என்க. மின் - மின்னுவது, வினைமுதற் பொருள்விகுதி புணர்ந்து கெட்டது. அன்பாவது - உறவினரிடத்து மனமகிழ்ச்சி நிகழ்த்திப் பிணிப்பித்து நிற்கும் நேயம். வன்போடு எனப்பிரித்து - வலிய துன்பத்தோடு என்று உரைக்க |