பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்19

கிரிசனையுன்னிவெள்ளிக்கிரிப்புறமெய்தியார்க்கு
மரியநற்றவஞ்செய்தேனுமவனருள்பெறுதியையா.

     (இ-ள்.) (தருமபுத்திரன்), பணிந்து - வணங்கி, முனிவன் மாற்றம்-
வியாசனது வார்த்தையை, பரிவுடன்-அன்போடு, தன் தலைமேல் கொண்டு-
தனது சிரத்தின்மேற்கொண்டு கௌரவித்து, வரி சிலைக்கு உலகம் எண்ணும்-
கட்டமைந்த வில்லின் தொழிலுக்கு (ச்சிறந்தவனாக) உலகத்தோரால் நன்கு
மதிக்கப்படுகின்ற, மகபதி மகனை நோக்கி-தேவேந்திரனுடைய குமாரானான
அருச்சுனனை நோக்கி, 'ஐயா-ஐயனே!' (நீ), வெள்ளி கிரி புறம் எய்தி-
வெள்ளிமயமான ஸ்ரீகைலாசமலையின் சாரலை யடைந்து, கிரிசனை உன்னி-
பரமசிவனைக் குறித்து, யார்க்குஉம் அரிய நல் தவம்செய்து ஏன் உம்-
எவர்க்கும்(செய்வதற்கு) அருமையான சிறந்த தவத்தைச் செய்தாயினும், அவன்
அருள் பெறுதி-அச்சிவனது கருணையால் (பாசுபதம் பெறுவாயாக; (எ-று.)

     தலைமேற்கொள்ளல் - சிரசாவகித்தல். மகபதி - யாகங்களுக்குத்
தலைவன்; நூறு அசுவமேத யாகஞ்செய்து இப்பதவிபெறுதலால், இவனுக்கு
இப்பெயர் வாய்த்தது. கிரிசன்=கிரிஸன்: மலையில் தங்குபவன்: "கிருஸோ
கிரஸோம்ருட:" என்று இருப்பதனால், கிரிஸன் என்றும் வடமொழியில்
சொல்லுண்டுஎன்று அறியலாம். பெறுதி-ஏவலொருமை.              (26)

27.எனவிடைகொடுப்பமண்ணிலிணையிலாவியாதன்பாத
மனனுறவிறைஞ்சியாங்கோார்மந்திரமுறையிற்பெற்று
நனிமிகுதிதியுநாளுநல்லதோர்முகூர்த்தந்தன்னிற்
றனிவதியியக்கர் காட்டத்தனஞ்சயன்சேறலுற்றான்.

     (இ-ள்) என - என்று சொல்லி, விடைகொடுப்ப - உத்தரவு கொடுக்க, -
தனஞ்சயன் - அருச்சுனன், மண்ணில் இணை இலா - உலகத்தில் (தமக்கு வேறொரு) உவமை யில்லாத, வியாதன் - வியாச முனிவரது, பாதம் -
திருவடிகளை, மனன் உற - மனம் பொருந்த, இறைஞ்சி - வணங்கி, -
ஆங்கு - அப்பொழுது, ஓர் மந்திரம் - ஒரு மந்திரத்தை, முறையின் -
முறைப்படி, பெற்று - (அவ்வியாச பகவானிடம் உபதேசம்) பெற்று, திதிஉம்
நாள்உம் நனி மிகு நல்லது ஒர் முகூர்த்தந்தன்னில் - திதியும் நக்ஷத்திரமும்
மிகவுஞ் சிறப்புடையதாகப் பெற்ற ஓர் வேளையில், இயக்கர் - யக்ஷர்கள், தனி
- தனிப்பட்ட, வதி-வழியை, காட்ட-, சேறல் உற்றான் - செல்லுதற்குப்
பொருந்தினான் (புறப்பட்டான்); (எ-று.)

     அருச்சுனன்பெற்ற மந்திரத்தின்பெயர் ப்ரதிஸ்ம்ருதியென்றுவடநூலால்
அறிக. 'சனபதம் இயக்கர்காட்ட' என்றபாடத்திற்கு-சனங்கன்செல்லும் வழியை
இயக்கர்காட்டஎன்று பொருளாமாயினும், அது சிறவாமைகாண்க. தனஞ்சயன்-
செல்வத்தைப் பெறுமாறு ஜயித்தவன்; யுதிஷ்டிரன் இராசசூய
யாகஞ்செய்யவேண்டியபொழுது அவன் கட்டளையால் வடதிசையிற்சென்று பல
அரசர்களை வென்று அவர்கள் செல்வத்தைத் திறையாகக் கொணர்ந்தனால்,
இவனுக்கு இப்பெற்ரவந்தது; இனி, வெற்றியையே பொருளாகவுடையவனென்று
பொருள்கூறினுமாம். திதி - பிரதமைமுதலியன. நாள்-அசுவினி முதலிய
நட்சத்திரங்கள். சேறல் - தொழிற்பெயர்.                         (27)