மாதலியும், துனைதேர் - (இயல்பிலே) விரைந்துசெல்லுந் தேரை, நனி தூண்டும் எல்லை- நன்றாகச்செலுத்திவருமளவில்,-(எ-று.) 'காணாவினவ' என மேற்கவியோடு இயையும். மின் ஆரும் - மின்னலையொத்த என்னவுமாம். நடாத்துக=நடத்துக. (280) 105.-அந்தரத்தில்ஓரூரைக்கண்டு அருச்சுனன் மாதலியை வினவுதல். செம்பொற்புரிசைதிகழ்கோபுரச் செம்பொன்மாடத்து அம்பொற்கொடிசேர்நகரந்தரத் தொன்றுகாணா வம்பிற்பொலிதார்த்தடந்தேர்விடு மாட்சியானை விம்பத்திறல்வார்சிலைவீரன்வினவவன்னான். |
(இ - ள்.)விம்பம் - வட்டமாக வளைதலையுடைய,திறல் - வலிமையுள்ள, வார் - நீண்ட, சிலை- வில்லைக்கொண்ட,வீரன் - அருச்சுனன்,-செம் பொன் புரிசை - சிவந்த பொன்னினாலாகிய மதில்களிலும், திகழ் கோபுரம் - விளங்குகின்ற கோபுரங்களிலும், செம்பொன் மாடத்து - சிவந்த பொன்னின்மயமான வீடுகளிலும், அம்பொன் கொடி - அழகிய பொன்னினாலாகியகாம்பையுடைய வெற்றித்துவசங்கள், சேர் - பொருந்தியுள்ள, நகர் ஒன்று - பட்டணம் ஒன்றை, அந்தரத்து - ஆகாயத்திலே, காணா- பார்த்து,-வம்பின் பொலி தார் - வாசனையோடு விளங்குகின்ற வெற்றிமாலையையணிந்த,தட தேர் விடு மாட்சியானை- பெரியதேரைச்செலுத்துகின்ற பெருமைக்குணமுடைய மாதலியை, வினவ - (இதன் வரலாறு யாதென்று) கேட்க,-அன்னான்- அவன்,-(எ-று.)- 'கூறுவானானான்'என வினைவருவித்து முடிக்க. அது மேல் ஐந்து கவிகளிற் கூறுகின்றார். இரண்டாம்அடியில், பொன்-அதனாலாகியதுவசதண்டத்துக்குக் காரணவாகுபெயர். (281) 106.-ஐந்துகவிகள் -அந்தரத்துத்தோன்றிய இரணியபுரத்தைப்பற்றி மாதலிகூறுதலைத்தெரிவிக்கும். மன்னுந்தனுசகுலமாதரில் வஞ்சநெஞ்சக் கன்னங்கரியகுழற்காலகை காமர்சோதிப் பொன்னங்கொடிபோலெழில்கூர்நுண் ணிடைப்புலோமை என்னும்பெயராரிருவோருள ரென்றுமுள்ளார். |
(இ - ள்.) மன்னும் - நிலைபெற்ற,தனுச குலம் மாதரில் - அசுரகுலத்து மகளிருள், வஞ்சம் நெஞ்சம் - வஞ்சனையையுடைய மனத்தையும், கன்னங்கரிய குழல் - மிகவுங்கறுத்த கூந்தலையுமுடைய, காலகை - காலகையும், காமர் சோதி - விரும்பப்படுகிற [அழகிய] ஒளியையுடைய, பொன் அங் கொடி போல் - அழகிய பொற்கொடிபோல, எழில் கூர் நுண் இடை - அழகு மிக்க மிகச் சிறியதான இடையையுடைய, புலோமை - புலோமையும், என்னும் பெயரார் - என்கிற பேருள்ளவர்களும், என்றும் உள்ளார் - எப் |