109. | பொன்காலுமெய்யர்பொறிகால்பொலங் குண்டலத்தர் முன்காலனையுஞ்சமர்மோதிமுருக்குமொய்ம்பர் மின்கால்படையர்விடங்காலும் விழியர்வெம்போர் வன்காலகேயரெனும்பேர்திசை வைத்தவீரர். |
(இ - ள்.)வெம் போர் வல் - கொடிய போரிலே வல்ல, காலகேயர் எனும் பேர் திசை வைத்த - (காலகையின் மக்களாதலால் வந்த) காலகேயர் என்னும் (தமது) பேரை எல்லாத்திசைகளிலும் பரவவைத்த, வீரர்-வீரர்கள்,- பொன் காலும் மெய்யர் - பொன்னொளியைவீசும் உடம்புள்ளவர்;பொறி கால் பொலம் குண்டலத்தர் - ஒளியை வீசுகின்ற பொன்னினாலாகிய குண்டலங்களையுடையவர்;முன்-விரைந்து சென்று, காலனைஉம்- யமனையும்,சமர் மோதி - போரில் தாக்கி, முருக்கும் - அழிக்கவல்ல, மொய்ம்பர் - வலிமையையுடையவர்;மின் கால் படையர் - ஒளியை வீசுகிற ஆயுதங்களையுடையவர்;விடம் காலும் விழியர் - (கோபமிகுதியால்) விஷத்தை வெளிப்படுத்துகிற கண்களையுடையவர்;(எ-று.) 110. | வருமுப்பொழுதுமறையந்தண ரங்கைவாரி உருமுப்புயல்போற்கவர்வோர்முன் னுகாந்தநாதன் பொருமுப்புரத்திலுறைதானவர் போலும்வீரர் இருமுப்பதினாயிரம்வஞ்சகரிங்குமுண்டால். |
(இ - ள்.) வரு- (மாறிமாறி) வருகின்ற, மு பொழுதுஉம் - (காலை நடுப்பகல் மாலைஎன்னும்) மூன்று காலங்களிலும், மறை அந்தணர் - வேதம் வல்ல பிராமணர்கள், அம் கை-(தமது) அகங்கைகளால் (சந்தியாவந்தனத்தில்) எடுத்துவிடுகின்ற, வாரி - (அர்க்கியப்பிரதான) ஜலத்தை, உருமு புயல்போல் - இடியையுடைய மேகங்கள் (கடலினீரை முகந்து பருகுதல்) போல, கவர்வோர் - பறித்துக்கொள்பவர்களும், முன் - முன்னே, உக அந்தம் நாதன் - யுகமுடிவுகாலத்துக்குத் தலைவனாகிய சிவபிரான், பொரு - போர்செய்து அழித்த, மு புரத்தில் உறை தானவர்போலும் - திரிபுரத்தில் வசித்த அசுரர்கள்போன்ற, வீரர் - வீரர்களும் ஆகிய, இரு முப்பதினாயிரம்வஞ்சகர் - வஞ்சனையையுடைய அறுபதினாயிரவர்அசுரர்கள், இங்குஉம் - இவ்விரணியபுரத்திலும், உண்டு - உளர்;(எ-று.)-ஆல் - தேற்றம். வருமுப்பொழுது -ஒன்றன்பின் ஒன்றாகவருகின்ற பிராதஸ்ஸந்தியை, மத்தியாஹ்நம், ஸாயம்ஸந்தியை என்னும் திரிகாலம். அந்தணர் - அழகிய தண்மையை [குளிர்ந்தஅருளை]உடையவர் என, பிராமணர்க்குக் காரணவிடுகுறிப்பெயர்:இனி, அந்தத்தை அணவுவார் - அந்தணர்:என்றது - வேதாந்தத்தையே பொருளாக மேற்கொண்டுபார்ப்பார் எனினுமாம். சருவசங்காரகாலத்து அழித்தற்றொழில்செய்யுங்கடவுளாதலால், உருத்திரனை 'உகாந்தநாதன்' என்றார். (286) |