பக்கம் எண் :

நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கம்195

தல்பற்றி, மனம்மிக்கவிரைவுக்கு உவமை கூறப்படும்.  மற்று - அசை.
'மற்றவன்'என எடுத்து - தேரிலுள்ளவரிருவருள் வீரனொழியப்பாகனாய்
நின்றவன் எனினுமாம்.                                  (288)

113.-தேர்நாணொலிகளைக்கேட்டுக்காலகேயர்
திடுக்கிடுதல்.

தேராரவாரத்துடனேதிண் சிலைவலான்றன்
போராரவாரச்சிலைநாணொலிமீதுபோக
வாராரவாரத்திடிகேட்ட வரவமொத்தார்
காராரவாரமெனப்பொங்குமக் காலகேயர்.

     (இ - ள்.)திண் சிலைவலான் தன் - வலிய வில்லில்வல்ல
அருச்சனனது  தேர் ஆரவாரத்துடனே - தேரின்பேரொலியோடே, போர்
ஆரவாரம் சிலைநாண் ஒலி - போரிற் கொண்டாட்டத்தையுடைய
வில்லினது நாணியின் ஓசையும், மீது போக - அந்நகரத்தின்மேற்செல, கார்
ஆரவாரம் என பொங்கும் அக்காலகேயர் - மேகத்தினது கிளர்ச்சிபோல
மேலெழுந் தன்மையையுடைய அந்தக் காலகேயர்கள், ஆர் ஆரவாரத்து
இடி கேட்ட - நிறைந்த ஒலியையுடைய இடியைச் செவியுற்ற, அரவம் -
நாகங்களை,ஒத்தார் - போன்றார்கள்;[திடுக்கிட்டார்என்றபடி] ;  (எ-று.)

     இரண்டாம்அடியில் 'பேராரவாரம்'என்னும் பாடம்,
மோனைத்தொடைக்குப்பொருந்தாது.                        (289)

வேறு.

114.-ஓசையைப்பற்றிக் காலகேயர் பலவாறு சங்கித்தல்.

இந்தவோதை யெழிலி யேழு மூழி நாளி டித்தெழும்
அந்தவோதை யோவதன்றி யாழி பொங்கு மோதையோ
கந்தன்வானின் மீது தேர்க டாவு கின்ற வோதையோ
எந்தவோதை யென்ற யிர்த்த யிர்த்து வஞ்சர் யாவரும்.

இதுமுதல்,நான்குகவிகள் - குளகம்.

     (இ - ள்.)வஞ்சர் யாவர்உம் - வஞ்சகராகிய அசுரர்களெல்லோரும்,
இந்த ஓதை - இவ்வோசை,-எழிலிஏழ்உம் ஊழிநாள் இடித்து எழும் அந்த
ஓசை ஓ - ஏழுமேகங்களும்  யுகாந்த காலத்தில் இடி
யிடித்தலாலுண்டாகின்ற அவ்வோசையோ?  அது அன்றி - அதுவல்லாமல்,
ஆழி பொங்கும் ஓதை ஓ - (அக்காலத்தில்) கடல்
மேற்பொங்குவதனாலுண்டாகும்ஓசையோ?  (அல்லது), கந்தன் வானின் மீது
தேர் கடாவுகின்ற ஓதை ஓ - (தேவசேனாதிபதியாகிய)சுப்பிரமணியமூர்த்தி
ஆகாசமார்க்கத்திலே தேரைச் செலுத்திவருகிற ஓசைதானோ? எந்த ஓசை
- (இவ்வோசைகளுள்) எவ்வோசையாம்?  என்று அயிர்த்து அயிர்த்து -
என்று பலவாறு சங்கித்து,-(எ-று.)-'தெழித்து'என மேற்கவியோடு
தொடரும்.