பக்கம் எண் :

200பாரதம்ஆரணிய பருவம்

122.-அருச்சுனனைஇரணியபுரத்தசுரர்
அலட்சியப்டுத்திப்பேசுதல்

உழுவைகண்டவுழைகள்போல வோடியோடிமேருவின்
முழைதொறும்புகுந்ததேவ ரேவல்கொண்டுமொய்ம்புடன்
இழிவில்சந்தனங்கடாவி யிங்குவந்ததென்னடா
புழுவிலொன்றுமொன்றுபூத லத்துளானொருத்தனீ.

     (இ-ள்.)புழுவில் ஒன்றும் - புழுக்களிலே சேர்ந்த [புழுக்களில்
ஒன்றையொப்ப எங்களால் மதிக்கப்படுகிற],ஒன்று பூதலத்து உளான்-
பொருந்திய நிலவுலகத்திலே யுள்ளவனாகிய,ஒருத்தன் நீ - (வேறு
துணையில்லாத)நீ ஒருவன், உழுவை கண்ட உழைகள் போல - புலியைப்
பார்த்த மான்கள்போல, ஓடி ஓடி -(எங்களைக்கண்டுபயந்து) மிகுதியாக
ஓடி, மேருவின் முழைதொறுஉம் புகுந்த - மேருமலையின்குகைகள்தோறும்
புகுந்து ஒளித்த, தேவர் - தேவர்களது, ஏவல்கொண்டு - ஏவுதலினால்,
மொய்ம்புடன் - வலிமையுடனே, இழிவு இல் சந்தனம் கடாவி -
குற்றமில்லாததொரு தேரைச் செலுத்தி, இங்கு வந்தது-,என் அடா -
யாதடா?  (எ-று.)

     என்னடா என்பது- இகழ்ச்சிதோன்ற நின்றது.  சந்தனம்=ஸ்யந்தநம்:
வடமொழி. பூதலத்துளானொருத்தன்நீ - முன்னிலையிற்படர்க்கை வந்த
இடவழுவமைதி.  'புழுவிலொன்றுமன்று'என்றும் பாடம்.         (298)

123.-அருச்சுனன்மறுமொழி.

என்றுகாலகேயர்நின்றி சைத்தசொற்செவிக்கொளா
நன்றுகாலகேயர்சொன்ன வாய்மைநன்றெனாநகைத்து
ஒன்றுகாலம்வந்ததிங்கு ருத்துநானுடன்றுமைக்
கொன்றுகாலனூரிலுங்களாவி யுங்கொடுக்கவே.

     (இ-ள்.) என்று- இவ்வாறு, காலகேயர்-,நின்று - எதிரில் நின்று,
இசைத்த - சொன்ன, சொல் - வார்த்தையை, செவி கொளா -
காதிலேகொண்டு [கேட்டு],-(அருச்சுனன்),-காலகேயர்சொன்ன வாய்மை
நன்று நன்று எனா-காலகேயர்கள்சொன்ன வார்த்தை மிகவும்
நன்றாயிருந்ததென்றுஎண்ணி, நகைத்து - சிரித்து, (அவர்களைநோக்கி),
'நான்-,இங்கு-இப்போர்க்களத்தில், உருத்து - கோபித்து, உடன்று பகைத்து,
உமை கொன்று - உங்களைக்கொலைசெய்து,உங்கள் ஆவிஉம்-
உங்களுடைய உயிரையும், காலன் ஊரில் - யமபுரத்திலே, கொடுக்க -
செலுத்துதற்கு, ஒன்று காலம் - பொருந்திய காலம், வந்தது - வந்துவிட்டது,'  
(எ-று.)-'என்றுமறுமொழி கூறினான்'என வருவித்து முடிக்க.       (299)