பக்கம் எண் :

210பாரதம்ஆரணிய பருவம்

     (இ-ள்.) அறுகுறை-தலையற்றஉடற்குறைகள், அலகைகளுடன்-
பேய்களுடனே, நின்று-ஒக்கநின்று, ஆடின-ஆனந்தக்கூத்தாடின: உகு
குருதியின் நீர்-(இறந்த உடம்புகளினின்று) பெருகுகின்ற இரத்த
வெள்ளங்கள், திசை தொறுஉம்-எல்லாத்திக்குக்களிலும், ஓடின-பெருகின;
பிணம் மலை-மலைபோன்றபிணக்குவியல்கள், நிரை நிரை - வரிசை
வரிசையாக, நீடின-உயர்ந்தன;(அவ்வுயர்ச்சியினால்),கதிர்கள்உம்-
(சூரியசந்திரர்முதலிய) சோதிகளும், மிசை வழி செல - ஆகாயமார்க்கத்திற்
செல்லுதற்கு, நெறி-வழியை, போய்-மேலே சென்று, தேடின-;(எ-று.)

    அறுகுறை-கபந்தம்.  கோபத்தோடு விரைந்து போர்செய்து நின்ற
வீரர்களது உடம்புகள் தலையறுபட்டபின்பும்பதைபதைத்துக் கைகால்கள்
துடிப்பனவற்றை 'ஆடினவறுகுறை'என்றார். பிணங்களைத்தின்னும்
பொருட்டு வந்த பேய் கூட்டங்கள் தமக்கு மிகுந்த இரை இங்குக்
கிடைத்ததென்று களித்து  நர்த்தனஞ்செய்தலால், 'அலகைகளுடனின்று'
எனப்பட்டது.  பின்னிரண்டடி-உயர்வுநவிற்சி.                (317)

142.-அருச்சுனனதுசிலைவலிகண்டுமாதலி அவனை
வணங்குதல்.

மாதவமிகுதிற லசுரரைமறலிக்கு
ஓதனமிடுமவ னொருசிலைவலிகண்டு
ஆதபனருணனி லணிகிளருயர்தேர்ச்
சூதனும்விசயன திணையடிதொழுதான்.

     (இ-ள்.) மாதவம்-பெரிய தவத்துடனே, மிகு திறல்-மிக்க
வலிமையையுமுடைய, அசுரரை - அசுரர்களை,மறலிக்கு - யமனுக்கு,
ஓதனம் இடும் அவன் - விருந்துணவாகக் கொடுத்து வருகின்ற
அருச்சுனனது, ஒரு சிலைவலி - ஒப்பற்ற வில்லினது வலிமையை, கண்டு -
பார்த்து,-ஆதபன்அருணனில் - சூரியனது சாரதியாகிய அருணன்போல,
அணி கிளர் - அழகுமிக்க, உயர் தேர் சூதன்உம் - உயர்ந்த தேரின்
பாகனானமாதலியும், விசயனது இணைஅடி தொழுதான் -
அவ்வருச்சுனனது இரண்டு பாதங்களிலும் விழுந்து வணங்கினான்;(எ-று.)

     மறலிக்குஓதனமிடுதல் - கொன்று யமலோகத்திற்கு அனுப்புதல்.
ஓதனம் - சோறு.  ஆதபன் - நன்றாகத்தபிப்பவன்.  அருணனில், இல் -
ஐந்தனுருபு. ஒப்புப்பொருளது.  கண்டு தொழுதான் என இயையும்.   (318)

143.-அருச்சுனனால்தமதுபகை நீங்கினமைகண்டு
தேவர் அகமகிழ்தல்.

தள்ளினர்தமதுயர் சலமினியிலதென்று
உள்ளினர்விசயன துறுதியுமுரனும்