பக்கம் எண் :

212பாரதம்ஆரணிய பருவம்

     இதுமுதற்பதினெட்டுக் கவிகள்-இச்சருக்கத்தின் முதற்கவி போன்ற
அறுசீராசிரிய விருத்தங்கள்.                               (320)

145.-அருச்சுனன்வில்லினின்று நாணியைக் கழற்றி
இளைப்பாறியிருத்தல்.

வாணகைதளவம்வாங்கு மவுணர்தம்மகளிர்தெய்வப்
பூணொடுகுழைகள்வாங்கப்புனைவயவாகைவாங்கும்
நாணுயர்தனுவின்வாங்கி நயந்திளைப்பாறிநின்றான்
தூணொடுபறம்புவாங்குஞ்சுடர்மணிக்கடகத்தோளான்.

     (இ-ள்.) தூணொடு- தூண்களையும்,பறம்பு - மலைகளையும்,
வாங்கும்-ஒக்கின்ற, சுடர் மணி கடகம் தோளான்-விளங்குகின்ற
இரத்தினங்களைப்பதித்த கடகமென்னும் அணியை யணிந்த
தோள்களையுடையஅருச்சுனன், - வாள் நகை - (தமது) ஒளியையுடைய
பற்களுக்கு, தளவம்-முல்லையரும்புகளும், வாங்கும்-தோற்கும்படியான,
அவுணர்தம் மகளிர் - அசுரப் பெண்கள், தெய்வம் பூணொடு-
தெய்வத்தன்மையையுடைய [சிறந்த]ஆபரணத்துடனே, குழைகள்-
காதணிகளையும்,வாங்க-கழற்றிவிடும்படி, புனைவயம் வாகை வாங்கும்-
அணிதற்குரிய வெற்றியைக் குறிக்கின்ற வாகைப் பூமாலையைச்சூடிய, உயர்
தனுவின் - உயர்ந்த வில்லினின்றும், நாண்-நாணியை, வாங்கி-இறக்கிவிட்டு,
நயந்து-மகிழ்ந்து, இளைப்புஆறி நின்றான்- (தேரினின்று இறங்கிச்) சற்றுச்
சிரமம் தீர்ந்து நின்றான்;(எ-று.)

     தளவு-அரும்புக்குமுதலாகுபெயர்: அம்-சாரியை. பல்லுக்கு
முல்லையரும்புஉவமை - வெண்மைக்கும், அழகுக்கு மென்க.  'வாணகை
தளவம் வாங்கும்'என்னும் அடைமொழி, அசுரமாதரது இயற்கையழகை
விளக்கி நின்றது.  தெய்வப்பூண் - விசுவகருமன் மயன் முதலிய
தேவத்தச்சர்களால் நிருமிக்கப்பட்ட ஆபரணம்: தெய்வப்பூண் வாங்க -
மாங்கலியத்தை யிழக்க வென்றபடியுமாம்.  கணவனையிழந்தவர் காதோலை
நீக்க வேண்டுமென்பது, நூற்றுணிபு.  மாங்கலியத்தை நீக்குதல் பிற்காலமரபு.
ஈற்றடியில், வாங்கும்-உவமவுருபு: "பாம்புருவடங்கவாங்கிய நுசுப்பின்"
என்ற விடத்துப் போல.  பறம்பு-சிறப்புப்பெயர் பொதுப்பொருளில் வந்த
தென்னலாம்: பாரியென்ற வள்ளலின் மலை,பறம்பு எனப் பெயர் பெறும்.
                                                     (321)

146.-அருச்சுனனாற்கொல்லப்பட்ட அவுணரைப் பற்றிய
கவிக்கூற்று.

பார்கொண்டதசுரர்மெய்யிற் பரந்தசெங்குருதிவெள்ளம்
கார்கொண்டவிசும்புகொண்ட தவர்பிணக்காயம்வானோர்
ஊர்கொண்டதுரிமையோடு மவருயிர்மீண்டுமென்றால்
தார்கொண்டவமரர்க்கெவ்வா றிவன்பகைதடிந்ததம்மா.