பக்கம் எண் :

நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கம்213

     (இ-ள்.)அசுரர் - (இறந்துபோன) அசுரர்களது, மெய்யின் உடம்பில்
நின்றும், பரந்த-பரவிய, செம்-சிவந்த, குருதி வெள்ளம்-இரத்த
வெள்ளமானது, பார் கொண்டது - பூமி முழுவதையும் தனதாகக் கொண்டு
பரவிற்று: அவர் பிணம் காயம் - அவர்களது பிணமாகிய உடம்பு,
கார்கொண்ட விசும்பு கொண்டது - மேகங்கள் பரவிய ஆகாயமுழுவதையும்
(தனக்கு) இடமாகக் கொண்டு உயர்ந்து குவிந்தது;அவர் உயிர்-அவர்களது
உயிர், மீண்டும்-மறுபடியும், வானோர்ஊர் - தேவலோகத்தை,
உரிமையோடுஉம்-சுவாதந்திரியத்துடனே, கொண்டது-(இடமாகக்) கொண்டது,
என்றால்-என்றுசொன்னால். தார் கொண்ட அமரர்க்கு-கற்பகப்
பூமாலையைச்சூடிய தேவர்களுக்கு, இவன்-அருச்சுனன், பகை தடிந்தது-
பகைவர்களைஒழித்தது, எவ்வாறு-எப்படி?  அம்மா-ஆச்சரியம்! (எ-று.)

     இறந்தபின்பும்அவ்வசுரர்களது இரத்தம் பூமியிலும், உடம்பு
ஆகாயத்திலும், உயிர் சுவர்க்கத்திலும் வியாபித்தனவாதலின் இவன்
அவர்களைஒழித்தானென்பது எவ்வாறு?  என வஞ்சப்புகழ்ச்சியணி
மூலமாக அருச்சுனனது சிறப்பை எடுத்துக்கூறியவாறு.  பிணக்காயம்-
இருபெயரொட்டுப் பண்புத்தொகை: உயிர் நீங்கினதாகிய உடம்பென்க. (322)

147.-அருச்சுனன்சுவர்க்கஞ் செல்லத் தேரேறுகையில்,
சித்திரசேனன்முந்திச்சென்று அவ்வருச்சுனன் செய்த
செயலெல்லாஞ்சொல்லல்.

இவ்வகையசுரசேனையாவையுமிரியநூறிக்
கொய்வரும்வரிவில்வீரன் குரகதத்தேர்மேற்கொண்டான்
வைவருமுனைவேற்சித்ரசேனன்வாசவனுக்கோடி
நைவருதுயரநீங்க நவின்றனன்புரிந்தவெல்லாம்.

     (இ-ள்.)கொய்வரும்-(பகைவர் தலைகளை)அறுத்து வருதலையுடைய,
வரி வில்-கட்டமைந்த வில்லையுடைய,வீரன்-அருச்சுனன், இ வகை -
இந்தவிதமாக, அசுரசேனையாவைஉம் - அசுரர்களது
சேனைகளெல்லாவற்றையும்,இரிய - கெடும்படி, நூறி - அழித்து, குரகதம்
தேர் மேல் கொண்டான்-(ஊருக்கு மீளும்பொருட்டுக்) குதிரைகளைப்
பூட்டிய (தனது) தேரின்மேலேறினான்: (அப்பொழுது), வை வரு முனை
வேல்-கூர்மை பொருந்திய நுனியுள்ள வேலாயுதத்தையுடைய, சித்ரசேனன் -
சித்திரசேனென்னுங் கந்தருவனாகியதூதன், புரிந்த எல்லாம்-(அருச்சுனன்)
செய்த செயல்களையெல்லாம்,வாசவனுக்கு-இந்திரனுக்கு, நைவரு துயரம்
நீங்க-மனந்தளர்கின்ற துன்பம் நீங்கும்படி, ஓடி நவின்றனன் - முன்னே
விரைந்துபோய்ச் சொன்னான்;(எ-று.)

     கொய்வு அரும்எனப்பிரித்து, பகைவரால் துணித்தற்கு அருமையான
வில்லெனவுமாம்.  புரிந்த - பெயர்.  இங்கே 'தேர்மேற்கொண்டான்'
என்றதனால்,கீழ் 145ஆம் கவியில் 'இளைப்