பாறி நின்றான்'என்றவிடத்து 'தேரினின்றுஇறங்கி'என வருவிக்க. (323) 148.-செய்தியுணர்ந்தஇந்திரன் நகரை யலங்கரிப்பித்து அருச்சுனனைஎதிர்கொள்ளல். சித்திரசேனன்மாற்றஞ் செவிக்கமுதாகக்கேட்டுப் பத்திகொள்விமானச்சோதிப் பைம்பொன்மாநகரிகோடித்து எத்திசையவருமேனையிமையவர்குழாமுஞ்சூழ வித்தகவிசயன்றன்னைவிபுதர்கோனெதிர்கொண்டானே. |
(இ-ள்.)விபுதர் கோன் - தேவராசனானஇந்திரன்,-சித்திரசேனன் மாற்றம் - சித்திரசேனனது வார்த்தையை, செவிக்கு அமுது ஆக-காதுக்கு அமிருதத்தை யொப்ப, கேட்டு-,பத்தி கொள் விமானம் சோதி- வரிசையாயிருத்தலைக்கொண்டுள்ள விமானங்களின் ஒளியோடுகூடிய, பைம்பொன் மா நகரி - பசும் பொன்மயமான பெரிய (தனது) அமராவதி நகரத்தை, கோடித்து-(தனது பரிஜனங்களைக்கொண்டு) அலங்கரித்து, எ திசையவர்உம்-எல்லாத் திக்குப் பாலகர்களும், ஏனைஇமையவர் குழாம்உம்-மற்றைத் தேவர்கூட்டமும், சூழ-(தன்னைச்)சுற்றியிருக்க, வித்தகம் விசயன் தன்னை- ஞானத்தையுடைய அருச்சுனனை,எதிர் கொண்டான்-எதிரில் வந்து அழைத்துப்போவானானான்.(எ-று.) தேவாமிருதம்நாவுக்கு இனிமைதருவதுபோலத் தூதன் சொல் செவிக்கு இனிமைதருவ தென்பார், 'சித்திரசேனன்மாற்றஞ் செவிக்கமுதாகக்கேட்டு'என்றார். அலங்கரிக்கும் விதத்தை "பூழிகளடக்கிச் செம்பொற் பூரணகும்பம் வைத்து, வாழையுங் கமுகு நாட்டி மணியொளித் தீபமேற்றிச், சூழ வன்பதாகை கட்டித் தோரணம் பலவு நாற்றி, யேழுயர் மாட மூதூ ரெங்கணுங் கோடித்தாரே"என மேல் நிரைமீட்சிச் சருக்கத்திற் கூறுவதனால்அறிக. எத்திசையவர்-அஷ்டதிக் பாலகர்களுள் அக்கினி, யமன், நிருருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்னும் தன்னையொழிந்தஎழுவரும். எதிர்கொள்ளுதல், மரியாதை. (324) 149.-எதிர்கொண்டஅருச்சுனனைஇந்திரன் தழுவுதல். கின்னரமிதுனமின்சொற் கீதங்களினிதுபாடத் துன்னியெங்கெங்குஞ்சேரத் துந்துபிக்குழாநின்றார்ப்பப் பன்னருமறைகடெய்வ முனிவரர்பகர்ந்துவாழ்த்த மன்னவர்மன்னன்றன்னைவாசவன்றழுவிக்கொள்ளா. |
இதுவும், மேற்கவியும்- குளகம். (இ-ள்.)கின்னர மிதுனம் - கின்னரமிதுனங்கள், இன்சொல் கீதங்கள் - இனிமையான சொற்களையுடையஇசைப்பாட்டுக்களை,இனிது பாட - (கேட்டற்கு) இனிமையாகப் பாடவும், துந்துபி குழாம் - தேவமுரசங்களின் கூட்டம், சேர-ஒருசேர, எங்கு |