பக்கம் எண் :

நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கம்215

எங்குஉம் துன்னி -எவ்வெவ்விடத்தும் நெருங்கி, நின்று - நிலைநின்று,
ஆர்ப்ப - ஆரவாரிக்கவும்,-தெய்வம்முனிவரர் -
தெய்வத்தன்மையையுடைய சிறந்த இருடிமார், பன்ன அரு மறைகள்-
சொல்லுதற்கு அருமையான வேதமந்திரங்களை,பகர்ந்து - சொல்லி,
வாழ்த்த - ஆசீர்வதிக்கவும்,-வாசவன்- இந்திரன், மன்னவர் மன்னன்
தன்னை- அரசர்கட்குட் சிறந்தவனானஅருச்சுனனை,தழுவிக்கொள்ளா -
அணைத்துக்கொண்டு,-(எ-று.)-'கடகரிப்பிடரின்வைத்து'என வருங்
கவியோடியையும்.

     கின்னரமிதுனம்- ஒரு தேவசாதி; இதனை,"நன்னரம்புடைய
தும்புருவோடு நாரதனுந் தந்தம் வீணைமறந்து, கின்னரமிதுனங்களுந்
தந்தங் கின்னரந் தொடுகிலோ மென்றனரே"எனப் பெரியார்
பணித்ததனாலும்அறிக.  கின்னரங் கொண்டு பாடி ஆணும் பெண்ணும்
ஒன்றையொன்று பிரியாது திரிதலாலே கின்னரமிதுனமெனப் பெயர்;
மிதுனம்-ஆணும் பெண்ணுமான இரட்டை.                   (325)

150.-யானைப்பிடரில்வைத்து அருச்சுனனை
ஊர்வலஞ்செய்ய, ஒருவிஞ்சையன் 'மானுடனுக்குஇது
தகுமோ?'எனல்.

கையுடைக்கயிலையன்னகடகரிப்பிடரின்வைத்து
மையுடைக்கொண்டல்வாக னகர்வலஞ்செய்தபோதின்
மெய்யுடைக்கலைகள்வல்லான்விஞ்சையனொருவன்கண்டு[றான்.
பொய்யுடைத்தலத்தோர்க்கின்ன பொறுக்குமோபுனிதவென்

     (இ-ள்.) மைஉடை கொண்டல் வாகன் - கருமை நிறத்தையுடைய
மேகத்தை வாகனமாகவுடைய இந்திரன், கை உடை கயிலைஅன்ன -
துதிக்கையையுடைய கைலாசகிரியையொத்த, கடம் கரி - (ஐராவதமென்னும்)
மதயானையினது,பிடரின் - பிடரியின்மேலே, வைத்து - (அருச்சுனனை)
வீற்றிருக்கச் செய்து, நகர் வலம் செய்த போதின்-அமரவாதிப்
பட்டணத்தைப் பிரதக்ஷிணஞ்செய்து வந்தபொழுதில்,-மெய்உடை கலைகள்
வல்லான் - உண்மைப்பொருள்களையுடையசாஸ்திரங்களில்  வல்லவனாகிய,
விஞ்சையன் ஒருவன் - வித்யாதரனொருத்தன்,கண்டு - (அதனைப்)
பார்த்து, (பொறுக்காமல் இந்திரனைநோக்கி),'புனித-பரிசுத்த
குணங்களையுடையவனே!பொய் உடை தலத்தோர்க்கு-
நிலையில்லாமையையுடையபூலோகத்திலுள்ளவர்களுக்கு, இன்ன-
இப்படிப்பட்ட சிறப்புக்கள், பொறுக்கும்ஓ - தகுமோ? [தகா],'என்றான்-
என்று சொன்னான்;(எ-று.)

     கையுடைக்கயிலைஎன்றது - இல்பொருளுவமை.  பிறமலைகளைக்
கூறாமற்கயிலையைஉவமை கூறியது, ஐராவதத்தினது வெண்மை நிறத்தை
விளக்க.  கயிலையன்னகரி என்றது, இந்திரன் யானைக்குக்குறிப்பு,
விஞ்சை-வித்யா.                                        (326)