151.-இந்திரன்சினந்து அவ்விஞ்சையனுக்கு மறுமொழி கூறலுறுதல். விஞ்சையனுரைத்தமாற்றம் விபுதர்கோன்செவியிற்சென்று நஞ்செனப்புகுதலொடு நயனங்கள்செந்தீக்கால நெஞ்சினிலறிவிலாதாய் நீயிதுகேட்டியென்னா மஞ்செனக்கரியமெய்யான் மனங்கனன்றினையசொல்வான். |
(இ - ள்.)விஞ்சையன் உரைத்த மாற்றம் - (இங்ஙனம்) வித்யாதரன் சொன்ன வார்த்தை, சென்று - போய், விபுதர் கோன் செவியில்- தேவேந்திரனது காதுகளிலே, நஞ்சு என புகுதலோடும்-விஷம்போல (வருத்தத்தை யுண்டாக்கிக் கொண்டு) பிரவேசித்த மாத்திரத்தில் [அதனைக்கேட்டஅளவிலென்றபடி],மஞ்சு என கரிய மெய்யான் - மேகம்போலக் கறுத்த உடம்பையுடைய இந்திரன், நயனங்கள் செம் தீ கால - கண்கள் சிவந்த நெருப்பை உமிழும்படி (மிகக் கோபித்து அவ்விஞ்சையனைநோக்கி), 'நெஞ்சினில்அறிவு இலாதாய்-மனத்திற் புத்தியில்லாதவனே! நீ இது கேட்டி-நீ (யான் சொல்லும்) இதனைக் கேட்பாயாக',என்னா- என்று சொல்லி, மனம் கனன்று - நெஞ்சு கொதித்து, இனையசொல்வான்-இவ்வார்த்தைகளைக்கூறுவானானான்; (எ-று.)-அவற்றை, மேல் இரண்டு கவிகளிற் கூறுகின்றார். இந்திரனதுநிறம் கருமையாதலைக்கம்பராமாயணத்தில் "வில்லாலொளிர்மேகமெனப்பொலிவான்"என்றதனாலும்அறிக. நயனங்கள் - இந்திரனது ஆயிரங்கண்கள். (327) 152.-இரண்டு கவிகள்- ஒருதொடர்:இந்திரன், அருச்சுனனைமானுடனெனலாகாதென்று காரணத்துடன் கூறித்தன்கோயிலிற் கொண்டுபுகல். ஆதிநாயகன்மாமாய னமரர்தந்துயருமேனைப் பூதலமடந்தைக்குற்ற புன்மையுந்தீர்ப்பானெண்ணிச் சீதைதன்கொழுநனானதிண்டிறலிராமன்போல ஓதநீருலகின்மீண்டு மருச்சுனனுருவங்கொண்டான். |
(இ-ள்.) ஆதிநாயகன்-முதற்கடவுளாகிய, மா மாயன் - சிறந்த திருமால்தானே,-அமரர்தம் துயர்உம்-தேவர்களது துன்பத்தையும், ஏனை- மற்றை, பூதலம் மடந்தைக்கு உற்ற புன்மை உம்-பூமிதேவிக்கு நேர்ந்த துன்பத்தையும், தீர்ப்பான் - நீக்க, எண்ணி - நினைத்து,-சீதைதன் கொழுநன் ஆன திண் திறல் இராமன்போல-சானகிப்பிராட்டிக்குக் கணவனானமிக்க வலிமையையுடைய ஸ்ரீராமபிரானாகஅவதரித்ததுபோல, ஓதம் நீர் உலகில் - கடலினீர் சூழ்ந்த நிலவுலகத்தில், மீண்டுஉம் - மறுபடியும், அருச்சுனன் உருவம் கொண்டான் - அருச்சுனனது ரூபமாக அவதரித்தான்;(எ-று.) ஆதிநாயகன்என்றது - யாவர்க்கும் முதல்வராகிய திரிமூர்த்திகளுள்ளும் தலைவனென்றவாறு. முன்னெருகாலத்தில் தேவர்க |