ளெல்லோரும்இராவணன் முதலிய ராக்ஷசர்களின் உபத்திரவம் பொறுக்கமாட்டாமல் ஸ்ரீமஹாவிஷ்ணுவை வணங்கி வேண்ட, அவர் அவர்களுக்கு அபயப்பிரதானஞ்செய்து பூமியில் இலட்சுமணன் பரதன் சத்துருக்கனன் என்கிற மூன்று தம்பிகளுடனே அயோத்தியரசனாகிய தசரதசக்கரவர்த்திக்குத் திருமகனாய்த்திருவவதரித்தார். அவர்தாம், ஸ்ரீராமபிரான், சனக மகாராசர் ஒருகால் யாகஞ்செய்யச் சாலை யமைப்பதற்காகப் பூமியை உழுதபொழுது பூமியினின்று கலப்பையுழுபடைச்சாலில் தோன்றினாள். அதனால்,'சீதை'எனப் பெயர்; சீதை - ஸீதா:உழுபடைச்சால். ஏககாலத்தில் பூமியில் துஷ்ட அசுரர்களும் கெட்ட அரசர்களும் பலர் தோன்றி விண்ணுலகத்தார்க்கும் மண்ணுலகத்தார்க்கும் பல வருத்தங்களைஇழைத்து வருகையில் பூமிதேவி தன்மேலிருக்கின்ற அக்கொடியவர்களாலுண்டான மிகுந்தபாரத்தைப்பொறுக்க மாட்டாதவளாய்த் துன்பமுற்றுப் பிரமன் முதலான தேவர்கள் முகமாக ஸ்ரீமந்நாராயணனைத்துதிசெய்துபிரார்த்திக்க, அவ்வெம்பெருமான் பூபாரத்தைத் தீர்க்கும்பொருட்டுக் கிருஷ்ண பலராமர்களாகவும் அருச்சுனனாகவும்திருவவதாரஞ் செய்தாரென்பது சரிதை. அருச்சுனன் இந்திரனது அமிசமாய்ப் பிறந்தவனாயினும்,அவன் திருமாலின் அமிசமுமாதலை,கண்ணபிரான் அருச்சுனனைநோக்கி "உன்னையான் பிரிவதில்லையொருமுறைபிரிந்து மேனா,ணன்னிலா வெறிக்கும் பூணாய் நரனுநாரணனு மானோம்,""பின்னொருபிறப்பின் யாமே யிராமலக்குமப்பேர் பெற்றோ,மிந்நெடும் பிறப்பி னீயும் யானுமா யீண்டு நின்றோம்" என்பதனாலும்அறிக. (328) 153. | ஆதலான்மனிதனென்றிவ் வருச்சுனன்றன்னையின்னே நீதியாலமரர்யாரு நெஞ்சினிலிகழலென்று மாதர்கள்வீதிதோறு மலர்மழைசொரிந்துவாழ்த்தக் கோதிலாவமரர்கோமான்கொண்டுதன்கோயில்சேர்ந்தான். |
(இ - ள்.) ஆதலால் - விஷ்ணுவின் அவதாரமாகையால், இ அருச்சுனன் தன்னை- இவ்வருச்சுனனை,இன்னே-இப்பொழுது, மனிதன் என்று-சாதாரணமானுடனென்று கருதி, நீதியால்-(அம் மனிதனுக்குரிய) முறைமையால், அமரர் யார்உம் - தேவர்களனைவரும்நெஞ்சினில் இகழல் - மனத்தில் அலட்சியஞ் செய்யவேண்டாம், என்று - என்றுசொல்லி,-கோது இலா அமரர் கோமான் - குற்றமில்லாத தேவேந்திரன்,-மாதர்கள் - தெய்வப் பெண்கள், வீதிதோறுஉம் - எல்லா வீதிகளிலும், மலர் மழை சொரிந்து - மலர்களைமழைபோலப் பொழிந்து, வாழ்த்த - மங்கலவாழ்த்துக் கூறாநிற்க, கொண்டு - (அருச்சுனனை)அழைத்துக்கொண்டு, தன் கோயில் சேர்ந்தான் - தனது அரண்மனையைஅடைந்தான்;(எ-று.) இகழல் - எதிர்மறை வியங்கோள். "பயனில்சொற்பாராட்டுவானை, மகனெனல்"என்றவிடத்து 'எனல்'என்பதுபோல. கோ+இல்=கோயில்; அரசனது வீடு. (329) |