கொண்டு - அசை: "என்றுகொண்டினையகூறி" என்னுங் கம்பராமாயணக்கவியிற்போல. இனி, உட்கொண்டு [கருதி]என உரைத்தலும், கேட்டுக்கொண்டு என இயைத்தலுமாம். வேண்டுவசாரியை பெறாதபலவறிசொல். (333) 158.-அருச்சுனன்தருமரிடஞ் செல்ல விடை கேட்டல். தேவர்பால்வரமுமெல்லாச் சிறப்புமின்னருளும்பெற்ற காவலன்கடவுள்வேந்தன் கழலிணைபணிந்துபோற்றித் தாவரும்புரவித்தானைத்தருமன்மாமதலைபொற்றாள் மேவரவேண்டுமின்னே விடையெனக்கருளுமென்றான். |
(இ - ள்.)தேவர்பால் - தேவர்களிடத்தில், வரம்உம் - வரங்களையும், எல்லாம் சிறப்புஉம் - மற்றை எல்லா மேன்மைகளையும்,இன் அருள்உம்- இனிய கருணையையும்,பெற்ற-, காவலன்-அரசனாகியஅருச்சுனன், கடவுள் வேந்தன்-தேவராசனானஇந்திரனது, கழல் இணை-திருவடிகளிரண்டையும், பணிந்து-வணங்கி, போற்றி-துதித்து, '(யான்),தாவரும்-தாவிவருகின்ற, புரவி தானை-குதிரைச்சேனையையுடைய,தருமன்மா மதலை-யமனதுசிறந்த குமாரராகிய யுதிட்டிரரது, பொன் தாள்-அழகிய திருவடிகளை, மேவரவேண்டும்-அடையவேண்டும்:(ஆதலால்), இன்னே-இப்பொழுதே, எனக்கு-, விடை அருளுக-உத்தரவு கொடுத்தருள்வாயாக,'என்றான்-என்று சொன்னான்:(எ - று.) காவலன்-காத்தற்றொழிலையுடையவன்:அன்றிக்கே காத்தலில் வல்லவன். கழல்-வீரர்காலணி:பாதத்திற்குத் தானியாகு பெயர். தா அரும் எனப்பிரித்து - (அசுவநூலிற்கூறிய) குற்றம் இல்லாத புரவி யென்றுமாம். புரவி-மற்றை மூன்று அங்கங்களுக்கும் உபலக்ஷணம். பொன் தாள் - பொற்கழலணிந்ததாளென்றுமாம். வேண்டும்-ஒருவகை வியங்கோள்வினைமுற்று. (334) 159.-சிலநாள்அங்குத் தங்கியிருக்குமாறு சொல்லி இந்திரன்அருச்சுனனுக்கு மாளிகைமுதலியன ஈதல். மைந்தனங்குரைத்தமாற்ற மனனுறமகிழ்ந்துகேட்டுத் தந்தையுமின்னஞ்சின்னாட் டங்குகவிங்கென்றேத்திச் செந்திருவனையதோற்றத்தெய்வமென்போகமாதர் ஐந்தொடாயிரரும்வேறோரம்பொன்மாளிகையுமீந்தான். |
(இ - ள்.)மைந்தன் - (தன்) மகனாகியஅருச்சுனன், அங்கு- அவ்வாறு, உரைத்த-சொன்ன, மாற்றம் - வார்த்தையை, தந்தைஉம்- பிதாவாகிய இந்திரனும், மனன்உற-மனத்திலே பொருந்தும்படி, மகிழ்ந்து கேட்டு-மகிழ்ச்சியுடனேசெவியுற்று,-'இங்கு-இவ்வுலகத்தில்,இன்னம் சில நாள் தங்குக - இன்னுஞ் சிலதினந் தங்குவாயாக,'என்று -என்று சொல்லி, ஏத்தி-புகழ்ந்து, செம் திரு அனையதோற்றம்-செம்மைநிறமுடைய இலக்குமியை யொத்த அழகிய காட்சியையும், மெல்-(மெய் வாய் கண்மூக்குச் செவி யென் |