னும்ஐம்பொறிகளாலும் அனுபவிக்கப்படுகிற ஸ்பரிசம் ரசம் ரூபம் கந்தம் சப்தம் என்னும் ஐவகை) மென்மைகளையுமுடைய,போகம்- சுகானுபவத்திற்குஉரிய, தெய்வம் மாதர் - தெய்வப்பெண்கள், ஐந்தொடு ஆயிரர்உம்-ஐயாயிரம்பேரையும், வேறு ஓர் அம்பொன் மாளிகைஉம்- அழகிய பொன்னினாலாகியதொருவேறு தனி வீட்டையும், ஈந்தான் - (அருச்சுனனுக்குக்) கொடுத்தான்; தெய்வமாதர்-தேவஸ்திரீகள். போகமாதர் - பொதுமகளிர்;போகம்- கலவிச்சிற்றின்பம். "சாயல்மென்மை"என்னுந்தொல்காப்பியச் சூத்திரவுரையைக் கொண்டு, மென்மையென்பது சுவையொளியூறோசைநாற்றமென்னும் ஐவகையையும் உணர்த்து மென அறிக. (335) 160.-இங்ஙன் அருச்சுனனுக்குத் தந்தபின் தேவேந்திரன் உரோமசரிடத்துஅருச்சுனன் பெருமையைக் கூறல். வரோதயமானதெய்வ வான்படைமறைகள்பின்னும் புரோசனப்பகைவற்கீந்து புரந்தரனிருந்தபின்னர்ச் சரோருகரண்டம்விண்டா லொருமயிர்சலிக்குஞ்செங்கை உரோமசமுனியைநோக்கி யுரைத்தனனுற்றவெல்லாம். |
(இ - ள்.)புரந்தரன் - இந்திரன்,-வர உதயம் ஆன-சிறந்த உற்பத்திக்கிரமத்தையுடையவையாகிய, தெய்வம் - தெய்வத்தன்மையையுடைய, வான்-சிறந்த, படை-ஆயுதங்களையும்,மறைகள் - மந்திரங்களையும்,பின்னும் - மீண்டும், புரோசனன் பகைவற்கு - புரோசனன் என்பவனுக்கு பகைவனாகியஅருச்சுனனுக்கு, ஈந்து-கொடுத்து, இருந்த பின்னர்-வீற்றிருந்தபின்பு,-சரோருகர் அண்டம் விண்டால்- பிரமதேவர் படைத்த அண்டகோளம் ஒருகால் அழிந்தால், ஒருமயிர் சலிக்கும்-ஒருமயிர் உதிர்கின்ற, செம் கை- சிவந்த கையையுடைய, உரோமசமுனியை நோக்கி - ரோமசர் என்னும் ரிஷியைப் பார்த்து, உற்ற எல்லாம் - நடந்த செய்கைகளையெல்லாம்,உரைத்தனன்-சொன்னான்; (எ -று.) வரோதயம்-குணசந்திபெற்ற வடமொழிப்புணர்ச்சி. உதயம் - உதித்தல்;தோற்றம். கீழ் ஐந்தாங்கவியில் "தெவ்வையடுந்திறற்படையு நல்கி"என்றதனைநோக்கி, இங்கே 'பின்னும்ஈந்து'என்றார். புரோசனன் என்பவன் - திருதராஷ்டிரனது மந்திரி:இவன், வாரணாவதமென்னும் நகரத்தில் அரக்கினாற்செய்து பாண்டவர்களுக்கு இடமாகக் கொடுக்கப்பட்ட மாளிகையில் அவர்களுக்குத் துணையாகத் துரியோதனனால்அனுப்பிவைக்கப்பட்டவன்: இவன் தனது எசமானனது கட்டளைப்படி,பாண்டவர்களும் குந்திதேவியும் தூங்குகின்ற சமயத்தில் அவ்வீட்டில் நெருப்புப் பற்றவைத்து அவர்களையெரித்து அழித்து விடுவதற்கு இருந்தான்:அவ்வஞ்சனையைவிதுரராலறிந்து பீமசேனன் ஒருநாளிரவில் அந்தப்புரோசனன் முதலியோர் தூங்குகையில் தீப்பற்றவைத்துவிட்டுத் தாயையும் உடன்பிறந்தவர்களையும் எடுத்துக்கொண்டு சுரங்கத்தின் வழியாய்த் தப்பி வெளிச்சென்றான். |