இச்சரித்திரத்தையுட்கொண்டு, அருச்சுனனை'புரோசனப்பகைவன்' என்றாரென்க;இதற்கு வேறு கதை பொருத்தமாகக் கூறுவராயிற் கொள்க. சரோருகர்-தாமரை மலரில் வாழ்பவர். ஸரோருஹம் - பொய்கையில் முளைப்பது;தலைமைபற்றிவந்தகாரணப்பெயர். ரோமஸர் - (உடம்பில்) மிக்க மயிருடையவர் என்பது பொருள். ஒவ்வொரு பிரளயத்திற்கு இவரது உடம்பினின்று ஒவ்வொரு மயிர் உதிரு மென்றும், இங்ஙனம் உடம்புமயி ரெல்லாம் உதிர்ந்தபின்பு இவருக்கு ஆயுள்முடியுமென்றும் கூறுப;இது பற்றியே, "எல்லாவுலகுமுடிந்திடு நாளு மீறி லாதான்"என்பர், மேல் புட்பயாத்திரைச்சருக்கதிலும், ஒரு காலத்திற் பிரமதேவன் எல்லாவுலகங்களையும்படைத்திட்டுத் தன்னைப்போலமிக்க ஆயுளையுடையார்வேறு ஒருவரும் இல்லையென்று பெருஞ்செருக்குக் கொள்ள, அக்கருவத்தை ஒழித்தருளத் திருவுளங்கொண்டு திருமால் பிரமனைஉரோமச மகாமுனிவரிடம் அழைத்துப் போக, அங்குப் பேசிக் கொண்டிருக்கையில் அம்முனிவர் 'பிரமர்களென்றுசிலர் நீர்க்குமிழிகள்போலே கணந்தோறுந் தோன்றி மறைபவராயிருப்பர்கள்' என்று கூறவே, பிரமன் செருக்கொழிந்தன னென்பது, ஒருவரலாறு:இதனை "நான்முகனாள்மிகத்தருக்கை யிருக்கு வாய்மை நலமிகுசீ ருரோமசனால் நவிற்றி"என்னும் பெரியதிருமொழியாலும் அறிக. இம்முனிவர், ஸ்ரீமகாவிஷ்ணுவின் அமிசமெனப் படுவர். (இவர் பெயர் லோமஸரெனவும் வழங்கும்.) படைக்கலன்கள் பின்னும் என்றும் பாடம். (336) 161.-இந்திரன்அருச்சுனன்பால் நிகழ்ந்தவற்றைத் தருமனுக்கு உரைக்குமாறுசொல்ல, உரோமசரும் போதல். வரிசிலைவிசயன்வந்துவான்றவம்புரிந்தவாறும் அரிவையோர்பாகனன்பா லவற்கருள்புரிந்தவாறும் இரியவென்பகையையெல்லா மிவன்றனிதடிந்தவாறும் தருமனுக்குரைத்தியென்னத் தபோதனமுனியும்போனான். |
(இ-ள்.)'வரி- கட்டமைந்த, சிலை-வில்லையுடைய,விசயன்- அருச்சுனன், வந்து - (யுதிட்டிரனைவிட்டு) வந்து, வான் - சிறந்த, தவம் - தவத்தை, புரிந்த - செய்த, ஆறுஉம் - விதத்தையும், அரிவை - உமாதேவியாகிய மனைவியை,ஓர் பாகன் - (தனது) ஒரு பக்கத்தில் [வாமபாகத்தில்]உடைய சிவபிரான், அன்பால்-பிரீதியினால்,அவற்கு - அவ்வருச்சுனனுக்கு, அருள்புரிந்த ஆறுஉம்-கருணைசெய்தவிதத்தையும்,- இவன்- இவ்வருச்சுனன், என்பகையை எல்லாம் - எனது பகைவர்கள் யாவரையும், இரிய - கெடும்படி, தனி - தானொருவனாக,தடிந்த ஆறுஉம்- அழித்த விதத்தையும், தருமனுக்கு - யுதிட்டிரனுக்கு, உரைத்தி - சொல்வாய்',என்ன - என்று (இந்திரன்) சொல்ல,-தபோ தனம் முனிஉம் - தவத்தையே செல்வமாகக் கொண்டுள்ள அவ்வுரோமச முனிவரும், போனான்- (காமியவனத்துக்குச்) சென்றார்;(எ - று.) |