பக்கம் எண் :

223

     அரிவை-இங்கே,பருவப்பெயராகாமற் பெண்ணென்னுமாத்திரையாய்
நின்றது.  தந்தையே மைந்தனாகப்பிறக்கிறானென்னும்நூல் வழக்குப்பற்றி,
தருமபுத்திரனை'தருமன்'என்றார். 'அரிவையோர்பாகன்'என்பதிலுள்ள
கதை:-பிருங்கியென்னும்மகாமுனிவர் பரமசிவனைமாத்திரம்
பிரதக்ஷிணஞ்செய்யக் கண்ட பார்வதீதேவி 'முனிவர்என்னைப்
பிரதக்ஷிணஞ்செய்யாமைக்கு ஏது என்ன?'என்றுவினவ, உருத்திரமூர்த்தி
'இஷ்டசித்திபெறவிரும்புபவர் உன்னையும்மோக்ஷம்பெற விரும்புபவர்
என்னையும்வழிபடுவர் என்ன, அதுகேட்ட தேவி, பெருமானோடு
பிரியாதிருக்குமாறு தவம்புரிந்து வாமபாகம் பெற்றாரென்பது.

     பாசுபதம்பெற்றபின் சுவர்க்கலோகத்துக்கு அருச்சுனனையழைத்துச்
சென்று அஸ்திராதிகளைக்கொடுத்து ஊர்வசியின் சாபத்தையும் வரமாக
மாற்றியபின், தேவேந்திரன்,நிவாதகவசர் முதலிய அசுரரை
நாசஞ்செய்வித்தற்காக அந்தச்சுவர்க்கலோகத்திலேயே அருச்சுனனை
யிருத்திக் கொண்டு, அவ்வருச்சுனனது பிரிவினால்வருந்தும் தருமன்
முதலானோரைச்சமாதானப்படுத்துமாறு ரோமசமுனியை விடுத்தானென்று
வியாசபாரதம் கூறும்.                                    (337)

நிவாதகவசர்காலகேயர்வதைச் சருக்கம் முற்றிற்று.

-----

மூன்றாவது

புட்பயாத்திரைச்சருக்கம்

    மலரின்பொருட்டுப் பிரயாணஞ்செய்ததைக் கூறுகின்றதொரு
நூற்கூறுபாடு என்பது, பொருள்.  புட்பம்=புஷ்பம்:யாத்திரை=யாத்ரா:
சருக்கம்=ஸர்க்கம்;மூன்றும் வடசொற்றிரிபுகள்.  இம்மூன்று சொற்கள்
தொடர்ந்ததொரு தொடர்மொழியிலுள்ள இரண்டு புணர்ச்சியும்,
செயப்படுபொருளில் [விஷயமாகவுடைமையாகியசம்பந்தப்பொருளில்]வந்த
ஆறாம்வேற்றுமைத் தொகையாம்;புஷ்பத்தினது யாத்திரையினது சருக்கம்
என விரிக்க:புட்பத்தைக் குறித்த யாத்திரையைப்பற்றிய சருக்கம் என
விரித்தால், இரண்டும் - இரண்டனுருபும் பயனும் உடன்தொக்க தொகையாம்.

1.-கடவுள் வணக்கம்

மற்கொண்டுவகுத்தனையசிகரத் திண்டோள் வாளரக்கன்குலத்
                                  தோடு மடிய முன்னம்,
விற்கொண்டு சரந்தொடுத்துப் புரையில் கே ள்வி விண்ணவர்தந்
                                  துயர்தீர்த்த வீரராமன்,
கற்கொண்ட வகலியை தன் னுருவ மீளக் கவின்கொள்ளக்
                               கொடுத்ததிருக் கமலபாதம்,
சொற் கொண்டு துதித்தெழுந்து துள்ளி நாளுந் தொழுமவரே
                             யெழுபிறவித் துவக்கற் றாரே.

     (இ-ள்.) மல்கொண்டு - வலிமையென்ற குணத்தைக் கொண்டு,
வகுத்(த)து அனைய- இயற்றப்பட்டதுபோன்ற, சிகரம்-